ஓவர் நைட்ல காய்ச்சலை விரட்டும் வீட்டு வைத்திய முறைகள்

 
fever

ஊரெங்கும் டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் என வரிசை கட்டிமக்களை பாடாகப்படுத்தி வருகிறது.
மழைக்காலங்களில் வந்து உயிரைப் பறிக்கும் இந்த விஷக்காய்ச்சல்களுக்குக் காரணமாக சாக்கடை, தேங்கிக் கிடக்கும் நீர், சுகாதாரக்கேடு, கொசுக்கடி, வெளி உணவு என பலவற்றைச் சொன்னாலும் மக்களின் அறியாமை, விழிப்புணர்வு இன்மையையும் ஒரு காரணமாகச் சொல்ல  வேண்டி இருக்கிறது. அதுஒருபுறமிருக்க, இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உயர்தர மருத்துவம் அளிக்கப்படுவதாகச் சொல்லப்படும் அலோபதி மருத்துவத்தால் சில நேரங்களில் இந்த வகைக் காய்ச்சல்களை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை.  இவற்றுக்கெல்லாம் நம் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. 

fever

துளசி:

 

துளசியில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து தான் நம்முடைய முன்னோர்கள் அனைவரது வீட்டிலும் துளசி செடியை வளர்த்துள்ளனர். இது நம்முடைய காய்ச்சலுக்கு சரியான தீர்வாக இருக்கும்.இதற்க்கு நாம் வெண்ணீரில் சிறிது துளசி இலைகளை போட்டு 10 நிமிடம் கழித்து குடிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் 3 வேளை குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

தண்ணீர்:

காய்ச்சல் வந்து விட்டால் நம்மில் பலர் தண்ணீர் குடிக்க தயங்குவோம். இதற்க்கு காரணம் தண்ணீர் குடித்தால் குளிர் காய்ச்சலாக மாறி  பயம் தா. ஆனால் அந்த பயம் அவசியமற்றது.நமக்கு காய்ச்சல் வந்தால் அந்த வெப்பத்தை குறைக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே காய்ச்சல் வந்தால் நாம் தண்ணீர் குடிப்பது நமக்கு நல்லது.

திரவ உணவுகள்:

 

நம்முடைய உடலில் உள்ள செரிமான உறுப்புகள் காய்ச்சல் வந்து விட்டால் சரியாக வேலை செய்யாது. எனவே நாம் திட உணவுகளை உண்பதை தவிர்த்து விரைவில் செரிமானம் அகா கூடிய உணவுகளை உன்ன வேண்டும். இதற்கு பழசாறு, கஞ்சி போன்ற உணவுகளை உண்பது நல்லது,

மிளகு:

காய்ச்சலுக்கு மிளகு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இதற்க்கு மிளகு மற்றும் 2 பல் பூண்டு எடுத்து அதில் தேன் கலந்து வெண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் குணமாகும். மேலும் மிளகு சுக்கு மற்றும் திப்பிலி சம அளவு எடுத்து தேனில் கலந்து குடித்து வந்தால் நமக்கு காய்ச்சல் குணமாகும்.மிளகை சிறிது அளவு எடுத்து வறுத்து கொள்ள வேண்டும். அதனை எடுத்து வெண்ணீரில் கொதிக்க வைத்து ஆரிய பின் குடித்து வந்தால் நீண்ட நாளாக இருக்கும் காய்ச்சலும் குணமாகும்.

ஒத்தடம்:

இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு வழிமுறை தான். ஆனால் சாதாரணமாக ஒத்தடம் கொடுப்பதற்கு பதிலாக வினிகர் கலந்த வெண்ணீரில் துணியை முக்கி நம்முடைய நெற்றியில் ஒத்தடம் கொடுத்தல் நம்முடைய காய்ச்சல் குணமாகும்.

ஆலிவ் ஆயில்:

நம்முடைய காய்ச்சலுக்கு ஆலிவ் ஆயிலும் பூண்டும் சிறந்த வீட்டு மருந்துகளாகும். இதற்க்கு ஆலிவ் ஆயிலில் சிறிது பூண்டு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் இதனை நம்முடைய பாதங்களில் தடவி பிளாஸ்டிக் அல்லது கம்பளி துணியால் மூட வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். இப்படி செய்தல் நம் காய்ச்சலுக்கு நிவாரணம் பெறலாம்.

உலர் திராட்சை:

காய்ச்சலுக்கு உலர் திராட்சை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இதற்க்கு சிறிது உலர் திராட்சை எடுத்து அதனை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நீ ரேம் கழித்து அந்த உளர் திராட்சை எடுத்து வடிகட்ட வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்து வந்தால் நம்முடைய காய்ச்சல் விரைவில் குணமாகும்