குழந்தைகளுக்கு ஜுரம் பரவும் இந்த நேரத்தில் வரமாக வந்த சில வைத்திய முறைகள்

 
fever

இந்த காலத்தில் குழந்தைகள் நல மருத்துவர்களின் கிளினிக்குகளில் பார்த்தால், கைக்குழந்தைகளில் ஆரம்பித்து ஏழெட்டு வயது குழந்தைகள் வரைக்கும் காய்ச்சலில் சோர்ந்துபோய் அம்மாக்களின் மடியிலும் தோள்களிலும் துவண்டு போய் கிடப்பார்கள்.சளிப்பிடித்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து காய்ச்சல் வருகிறது என்றால், மழைக்கால தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இரண்டு, மூன்று நாள் இருந்துவிட்டு போய்விடும். அம்மாக்கள் 'அப்பாடா' என்று சற்று ரிலாக்ஸ் ஆகிற நேரத்தில் மறுபடியும் மெல்ல தலைகாட்ட ஆரம்பிக்கும். இதுவும் மழைக்கால தொற்றுநோய்களால் வருகிற காய்ச்சல்தான்.இந்த மாதங்களில், சில குழந்தைகளுக்குக் காய்ச்சலுடன் தொண்டையில் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படும். இதனால், தொண்டையெல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் தவிப்பார்கள்.

fever

வெது வெதுப்பான நீரில் சிறிது பருத்தி துணியை நனைக்க வேண்டும்.தண்ணீரை பிழிந்து துணியினை நெற்றி பகுதியில் சிறிது வைக்க வேண்டும்.குழந்தைகளின் உடலிலும் துடைத்து  எடுக்கலாம்.நீர் குளிர்ந்த நீராக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டுமென்றால் இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

2.நீர்ச்சத்து அவசியம்

அதிகப்படியான வெப்பநிலையால் நீர்ச்சத்து குறைந்து சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும்.குழந்தைகளை தண்ணீர் அதிக அளவில் பருக வைப்பது நல்லது.ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தை என்றால் அடிக்கடிதாய்ப்பால் தர வேண்டும்.ஆறு மாத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர்   மற்றும்  பழச்சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.தண்ணீர் கொதித்து ஆறவைத்த தண்ணீராக இருப்பது நல்லது.

3.வெங்காயம்

உடலின் வெப்பநிலை குறைக்க வெங்காயம் பெரிது உதவும்.வெங்காயத்தை வட்டமான பெரிய துண்டுகளாக நறுக்கி  குழந்தையின் பாதத்தில் நன்றாக  2 நிமிடம் தேய்க்க வெப்பநிலை குறையும்.ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

4.துளசி தண்ணீர்

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தவுடன் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம்.ஆறியவுடன் சிறிது சிறிதாக அந்த தண்ணீரை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் நன்கு குணமாகும் வரை துளசி தண்ணீரை  கொடுக்கலாம்.

5.எலுமிச்சை,இஞ்சி மற்றும் தேன்

இந்த வைத்தியத்தினை 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றலாம்.1 டே.ஸ்பூன் எலுமிச்சை சாறை  தண்ணீர் கலக்காமல் எடுத்து கொள்ளவும். இதனுடன் 1 டே.ஸ்பூன் தேன் மற்றும் 4 சொட்டு இஞ்சி சாறு சேர்க்கவும்.காலை,மாலை இரு வேளை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

6.மல்லி கஷாயம்

இரண்டு டம்ளர் தண்ணீரில் 1 டே.ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்கவும்.ஒரு டம்ளர் அளவிற்கு வற்றும் வரை நன்றாக காய்ச்சவும்.இதனுடன் கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல பலன்  கிடைக்கும்.

7.உலர் திராட்சை

அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும் திராட்சை மிருதுவாகிவிடும். இதனை அரைத்து பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து காலை,மாலை இரு வேளை கொடுக்கலாம்.