பாஸ்ட் புட் பிரியர்களே !இதை கண்டுக்காம விட்டா கல்லீரலை கண்டமாக்கிவிடும்

 
junk food

ஃபாஸ்ட் புட் உணவுகளில் சர்க்கரை மற்றும் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை உடலின் இயக்கத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறவிடாமல் தடுப்பதோடு, இளம் வயதிலேயே நீரிழிவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்தம், காது கேளாமை போன்றவற்றையும் ஏற்படுத்தும்
துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவுக்கதிகமாகச் சேர்த்தால் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது யாருக்கும் தெரியாத உண்மை. இதை நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கி உண்ணக் கொடுத்து அவர்களுடைய உடல் நலனையும் கெடுக்கிறோம். பொதுவாக அதிகமான காரம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறந்த உணவுப் பழக்கவழக்கத்தைக் கையாண்டால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. துரித உணவுகளால் மக்களுக்கு எல்லா வகையிலும் தீமை மட்டுமே ஏற்படுகிறது. நமது வயிற்றைக் குப்பைத் தொட்டியென நினைத்து அனைத்து வகையான துரித உணவுகளையும் நாம் உண்ணுகிறோம். இதன் விளைவு தேவையற்ற உடல் உபாதைகளே. எனவே துரித உணவுகளைத் தவிர்ப்போம் நம் உயிரைக் காப்போம்...

கல்லீரலில் எப்படி கொழுப்பு அதிகமாக படிகிறது 

மேலும் நொறுக்கு தீனி snacks என்று சொல்லிகொன்டு காலை மாலை என்று கன்டதையும் போட்டு விழுங்குகின்றனர். தற்ப்போது டீ கடைகளில் விற்க்கபடும் போன்டா, பஜ்ஜி, சமோசா, வடை , பானிபூரி oil food  என்று சாப்பிடுகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக ஒருவர் சாப்பிடும் பொழுது அதில் உள்ள என்னைகள் நமது கல்லீரலில் அதிகபடியான கொழுப்பாக தங்கிவிடுகின்றன. 


Fatty Liver அறிகுறிகள் என்ன ?


முக்கிய அறிகுறிகள் 

1) பசியின்மை

2) சோர்வு

3) குமட்டல்
4) வயிற்றின் வலதுபக்கம் லேசான வலி ( lever pain )

5) அதிகபடியான வயிற்று வலி ( heavy pain )

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அனுகி உடல் பரிசோதித்துகொள்வது நல்லது
இது போன்ற உணவுகளை நாம் குறைத்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. முடிந்த அளவு உணவு கட்டுபாடுகளை சரியாக கடைபிடித்தாலே இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக நம்மை காத்து கொள்ள முடியும்.
உணவே மருந்து.. .மருந்தே உணவு...  என்ற பழமொழிக்கேற்ப சிறந்த உணவே நமக்கு மருந்தாக அமையும்.


அதே நேரத்தில், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக் கேற்ப எந்த உணவையும் அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவை மீறும் போது அது நமக்கே பல ஆபத்துக்களை விளை விப்பதுண்டு.

இந்த அவசர நாகரீக உலகத்தில் அனைவரும் அவசரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக் கிறோம். அவசரம், அவசரம், எதிலும் அவசரம் எங்கும் அவசரம்.