எருக்கன் பூவில் ஏராளமான மருத்துவ குணமிருப்பதால்தான் விநாயருக்கு படைக்கிறோம்

 
erukkan

நாம் விநாயகர் சதுர்த்திக்கு விநாயருக்கு மாலையாக அணிவிக்கும் எருக்கம்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது .அதனால் தான் நம் முன்னோர்கள் அதை நாம் வழிபடும் விநாயருக்கே மாலையாக அணிவித்து அழகு தாஎன்றால் அது மிகையாகாது  
 எருக்கு இலை பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.எருக்கு பொதுவாக காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.

எருக்கன் செடியின் மருத்துவப் பயன்கள்- - Medicinal benefits of Erukkan plant  | பெமினா தமிழ்
எருக்கு பட்டை, பூ ஆகியவை கோழையகற்றும்; 
.  வீட்டில் பூச்சிகள், விஷ வண்டுகள் இருந்தால் அந்த வீட்டில் எருக்கன் பூவை அல்லது வேறை வைத்தால் அந்த பூச்சிகள் வராது என்கிற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது 

பல வைத்தியம் செய்தும் குணமாகாத குதிகால் வலியால் அவதிப்படுவோர் ,நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்கன் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை ஐந்து நிமிடங்கள் வரை வைத்தால் அந்த வலி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் 

இரைப்பு என்கிற ஆஸ்த்துமா நோயால் அவதிப்படுவோர் எருக்கு பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரைப் பங்கு சேர்த்து அரைத்து, மிளகு அளவு உருண்டையாக்கி, காய வைத்து, தேனில் 2 உருண்டைகள் கரைத்து சாப்பிட்டால் அந்த ஆஸ்த்துமா இல்லாமல் போய் விடும் 

நெஞ்சு சளியால் அவதிப்படுவோர் வெள்ளெருக்கன் பூக்களை சேகரித்து, காம்பு உள் நரம்புகள் ஆகியவற்றை நீக்கி, சிறிது மிளகு சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரைகளாக செய்து கொள்ள வேண்டும். இந்த மாத்திரையில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளைகள் தேனில் உரைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் கட்டிக்கொண்டு தொல்லை கொடுக்கும் நெஞ்சு சளி கரைந்து வெளியேறி விடும் .
எருக்கு இலையை வதக்கி இளஞ் சூட்டோடு வைத்துக் கட்டி வர  உடையாத கட்டியும் பழுத்து உடைந்து விடும் ,மேலும் அதை நாள் பட்ட புண்கள் மீது விளக்கெண்ணெயில் குழைத்து தடவினால் புண் குணமாகும் 


.