என்னது !மலிவான எள்ளுருண்டையில் இவ்ளோ வலிமை இருக்கா ?
நமது அன்றாட உணவுகளை சாப்பிட்டது போக அவ்வப்போது சிறு நொறுக்குத்தீனிகள் மற்றும் இதர சிற்றுண்டிகளை சாப்பிடுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. அப்படியான சமயங்களில் துரித உணவுகள் போன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளாமல் உடலுக்கு நமையை செய்யும் உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறான ஒரு உணவு வகை தான் “எள் உருண்டை”. இந்த எள் உருண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்வோம்.
சத்து உணவு மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் உருண்டை சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிக கொண்டது.

பொதுவாக இந்தியா முழுவதுமே, எள்ளுடன் வெல்லம் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டையில் அளப்பறிய சத்துக்கள் இருக்கின்றன.எள்ளின் தன்மையுடன், வெல்லத்தின் நற்குணங்கள் இணைந்து இந்த திண்பண்டத்தை மிகவும் சத்துள்ளதாக மாற்றிவிடுகிறது.
காரம் சேர்த்தும் எள்ளுருண்டை செய்யும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது. பல்வேறு கிராமங்களில் தற்போதும் காரம் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை திண்பண்டமாக இருக்கிறது. ஆனால், பொதுவாக கடைகளில் விற்கப்படுவதை காணமுடிவதில்லை.
குளிர்காலத்தில் நமக்குத் தேவையான சத்துக்களை, எள் லட்டு, எள் மிட்டாய், போன்ற தீனிகளில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எள் (Sesame Seeds) நமது உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
எனவே குளிர்காலத்தில் எள்ளுருண்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
எள்ளின் அற்புதமான நன்மைகளை கருத்தில் கொண்டுதான், எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை, எள்ளெண்ணெய் என்று சொல்லாமல், நல்லெண்ணெய் என்று சொல்லி, அதை சமையல் எண்ணெயாக (Cooking Oil) பயன்படுத்துகிறோம்.
எள்ளில் உள்ள கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும் என்றால், அத்துடன் வெல்லம் சேரும்போது, எள்ளின் பயன்கள் இரட்டிப்பாகிறது என்று ஆயுர்வேதம் சொல்கிறது.
எள்ளுருண்டையை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இரத்த சோகை (Anemia) இருப்பவர்கல் தொடர்ந்து எள்ளுருண்டையை சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்ற பழமொழியை கேட்டிருக்கலாம்! எளிமையான, விலை குறைவான எள்ளுருண்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக்காட்டும் ஆரோக்கிய மொழி இது...
இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என வயது பாகுபாடின்றி அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்ளவது உடலுக்கு மிகவும் நல்லது.

