சித்தர்கள் சொன்ன செலவில்லாத இந்த எட்டை பின்பற்றினா நூறு வருஷ ஆயுள் கேரண்டி

 
eight walk

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவது, சரியான அளவான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்த வழிகளாக இருக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்களும், உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படச் செய்யக்கூடிய ஒரு உடல் நல செயல்பாடாக நடைப்பயிற்சி இருக்கிறது. சமீப காலமாக இந்த நடைப்பயிற்சியில் புது வகையாக 8 வடிவ நடைபயிற்சி அதிக மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. நமது நாட்டின் சித்தர்கள் கண்டுபிடித்த இந்த 8 வடிவ பயிற்சி முறை மேலை நாடுகளுக்கு சென்று, “இன்பினிட்டி வாக்கிங்” என்ற பெயரில் நம் நாட்டிற்கே திரும்ப வந்துள்ளது. ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும் இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம்? அதனால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் என்ன? என்பதையே இங்கு தெரிந்து கொள்ளலாம்.

8 walk

நடக்கும் முறை:

எளிய முறையில் வீட்டிற்கு வெளியிலோ,அறைக்குள்ளோ  அல்லது மொட்டை மாடியிலோ நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

 6க்கு 12அடி அல்லது 8க்கு16 அடி அளவில் செவ்வகக் கோடிட்டு அதற்குள் 8 வடிவத்தை வரைந்து கொள்ளுங்கள். 

 

 தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று அல்லது இருவேளை செய்தால் போதுமானது.

 

 காலையில்,  மாலையில் அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.

15 நிமிட முடிவில்  இரு நாசித்  துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட மூச்சுக் காற்றையும் உணரலாம்.  பின்னர் நடை பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.

நன்மைகள்:

 முதுமையை போக்கி இளமையாக்கும்,

 சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது, மார்பு சளி தானாகவே வெளியே கரைந்து இறங்குவதை உணரலாம்.

கண்பார்வை அதிகரிக்கும்.  ஆரம்ப நிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது.

 செவிகளின் கேட்கும் திறன்  அதிகரிக்கிறது,

 குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,  மலச்சிக்கல் தீரும்,

குடலிறக்க நோய் ( ஹெர்னியா) குணமாகும்,

பாத வெடிப்பு,  வலி,  மூட்டுவலிகள் மறைந்து விடுகின்றன,

சர்க்கரை நோய் குறைந்து முற்றிலும் குணமடையும்,

 ரத்த ஓட்டத்தை சீர் செய்வதால் இரத்த அழுத்தம் சீராகிறது,

தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை தரும்,

மன அழுத்தத்தை குறைக்கிறது,

இதயத்தை பலப்படுத்தி ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது,

ஆஸ்துமா நோயை  குணமாக்குகிறது,

உடல் எடையை  எந்த ஒரு பக்கவிளைவும்  இல்லாமல் குறைக்கிறது.

  சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சியை வர்ம நடைபாதை பயிற்சி என்றும் , யோகப் பயிற்சி என்றும் அழைக்கலாம். முதியோரும்,  நடக்க  இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.இந்த பயிற்சியால் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும்,இளமையோடும் வாழலாம். நம் முன்றோர்கள் வழிகாட்டிய இந்த பயிற்சியை செய்து பயன் பெறுவோம்.