வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
junk food junk food

பொதுவாக நாம் காலையில் காலி வயிற்றில் என்ன சாப்பிடுகிறோமோ அது அன்றைய நாள் நம் மன நிலையினை தீர்மானிக்கும் .காலையில் நாம் உண்ணும் சில உணவுகள் அன்றைய நாள் முழுக்க நம்மை டென்ஷனாகிவிடும் .சில உணவுகள் நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் .எந்த உணவுகள் நமக்கு எந்த மாற்றத்தை தரும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் பப்பாளியை சாப்பிடலாம். பப்பாளி பகல் முழுவதும் உங்களை ஒரு மென்மையான உணர்வோடு இருக்க வைக்கும்.
2.காலையில் எழுந்தவுடன் தர்பூசணி பழத்தை சாப்பிடலாம்.  காலையில் தர்பூசணி பழத்தை எடுத்துக்கொள்வது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. 
3.காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடலாம்.  பாதாமை காலையில் நீங்கள் சாப்பிடும் பொழுது செரிமானம் எளிதாகிறது.
4.காலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். பேரிச்சம்பழம் செரிமானத்தை அதிகரிக்கிறது. 
5.காலை உணவாக சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். . இதனால் மனநிலை தெளிவாகும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருக்காது. 
6.காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை பழத்தை சாப்பிடலாம். . உலர்திராட்சை உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த ஒன்று.
7. காலையில் வெறும் வயிற்றில் . ஆரஞ்சு, அன்னாசி, கிவி, எலுமிச்சை, கொய்யா போன்ற சிட்ரஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை காலையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. 
8.காலையில் வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இது வாயுத் தொல்லை அதிகரிக்கும். 
9.பேக்கரி பொருட்கலான கேக், பீட்சா போன்ற பேக்கரி பொருள்களை காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் உட்கொள்ளும் பொழுது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். 
10.காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. காரமான உணவுகள் வயிற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் 
11.காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடக் கூடாது.