தூக்கமின்மை பிரச்சினையால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?
பொதுவாக முன்பெல்லாம் இரவு எட்டு மணிக்கெல்லாம் அனைவரும் தூங்கி விடுவதுண்டு .ஆனால் இன்று இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் இரவு 12 மணிக்கு மேல்தான் பலர் தூங்க செல்கின்றனர் .இதனால் உடலில் ஆரோக்கியம் கெட்டு பல ஆஸ்பத்திரிகளுக்கு அலைகின்றனர் .மேலும் இந்த தூக்கமின்மை பிரச்சினையால் என்ன பாதிப்பு வரும் என்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.இரவில் 12 மணிக்கு மேலும் சரியான தூக்கம் இல்லாமல் தவித்தால், காது, மூக்கு மற்றும் தொண்டை சார்ந்த பிரச்னைகள் உருவாகும்.
2.இந்த தூக்கமின்மை பிரச்சினையால் அவர்களுடைய மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு சளி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும்.
3.இந்த தூக்கமின்மை பிரச்சினையால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.
4.ஒருவேளை ஏற்கனவே இதுபோன்ற இந்த தூக்கமின்மை பிரச்சினையால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தால், மேலும் தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படும்.
5.பொதுவாக நம் உடலில் பல சுரப்பிகள் உண்டு .நமது உடலமைப்புக்கு சுரபிகள் வேலை செய்வது முக்கியம்.
6.நம் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சுரபிகள் பல நள்ளிரவில் நாம் தூங்கும் நேரத்தில் தான் பணி செய்கிறது.
7.நீங்கள் ஆழ்ந்த தூக்கத்துக்கு போகாமலும், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதாலும் அந்த சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்யாது
8.இந்த சுரப்பிகள் தூக்கமின்மையால் வேலை செய்யாமலிருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைக்கு தீங்கு விளைவிக்கும்.
9.குறிப்பாக ஒரு சில சுரபிகளில் ஏற்படும் கோளாறுக்கு மருந்தே கிடையாது.
10.மூளைக்கு அருகில் இருக்கும் “பிட்யூட்டரி” சுரபியின் பயன்பாடு மாறினால், உடலின் ஒட்டு மொத்த இயக்கமே மாறி,நம் உடலின் ஆரோக்கியம் கெடும் .இதற்கு இரவில் தூங்க வேண்டும் .


