அளவிற்கு அதிகமாக சீரகம் சாப்பிடும்போது என்ன பாதிப்பு தெரியுமா ?

 
seeragam

பொதுவாக சீரகம் சாப்பிடுவது நமக்கு ஜீரண சக்த்தியை கூட்டும் .அந்த சீரகம் அளவுக்கதிகமானால் நம் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் என்று இப்பதிவில் நாம் காணலாம் 
1.நம் உணவில் சீரகம் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

2.எந்த ஒரு பொருளுமே அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று அனைவரும் அறிந்ததே. 
3.அதில் சீரகம் என்பது சமையலறையில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று. இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றும் கூறுவார்கள்.

4.சீரகம் அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளும் ஏற்படும்.

5.அளவிற்கு அதிகமாக சீரகம் சாப்பிடும்போது அது கல்லீரலை பாதிக்கிறது. 
6.அது மட்டும் இல்லாமல் சிறுநீரகப் பிரச்சனையையும் ஏற்படுத்திவிடும்.

7.மேலும் அதிகப்படியான சீரகம் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் மற்றும் ஏப்பம் பிரச்சனை வரக்கூடும்.
8.கர்ப்பிணிப் பெண்கள் சீரகம் அதிகமாக சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும். 
9.மேலும் மாதவிடாய் நாட்களில் சீரகத்தை தவிர்ப்பது சிறந்தது.

10.அதிகமாக சீரகம் சேர்க்கும் போது உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எனவே சீரகத்தை அளவாக பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.