அதிக வெந்நீரைக் குடிப்பதால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
water

பொதுவாக நம் உடல்நிலை சரியில்லையென்றால் வெண்ணீர் குடிக்க சொல்வார்கள் .ஆனால் பலர் தேவையின்றி அதிகம் வெந்நீர் குடித்து வருவதுண்டு .இப்படி தேவையின்றி வெந்நீர் குடிப்பதால் நம் கிட்னி பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .இப்படி தாகம் இல்லாமல் வெந்நீரை அதிகம் குடித்தால் என்ன பாதிப்பு வரும் என்று இந்த பதிவினில் பார்க்கலாம் 

1.சிலர் அதிக அளவு சூடான நீரை குடிப்பர் .இப்படி சுடுநீரை குடிப்பதன் காரணமாக சிறுநீரகம் செய்யும் வேலை மிகவும் அதிகரிப்பதால், அதன் செயல்பாட்டை அது பாதிக்கும்.
2.தாகம் இல்லாமல் வெந்நீரை அதிகம் குடித்தால், அது உங்கள் மூளைத் திறனை பாதிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
3.வெந்நீரை வேண்டும் என விரும்பினாலோ அல்லது தொண்டையில் பிரச்சனை இருந்தாலோ மட்டும் குடிக்கவும். 
4.மேலும் சிலருக்கு வயிற்று வலி இருந்தாலும் வெந்நீர் அருந்தலாம். 
5.அதிகப்படியான சூடான நீரைக் குடிப்பதால்,இது மூளை தொடர்பான பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இதனால் தலை வலியும் ஏற்படலாம்.
6.இரவில் தூங்கும் முன் வெந்நீரை உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் இரவில் சரியாக தூக்கம் வராது. 
7.வெந்நீர் குடிப்பது  செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது மூளையில் மண்டை ஓட்டை அழுத்தி, தலைவலி மற்றும் பிற பிரச்சனைகளைத் தூண்டும்
8.சில நேரங்களில் அதிக சூடான நீரை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். 
9.அதிக வெந்நீரைக் குடிப்பதால், உதடுகள் மற்றும் வாயின் உட்புறப் பகுதி எரிந்து, சிறு தீக்காயங்கள் ஏற்படும்.