முட்டையை சூடு படுத்தி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
egg

பொதுவாக இன்றைய நாகரிக உலகில் குளிர்சாதன பெட்டியும் ,மைக்ரோ ஓவனும் நமக்கு நோய் தரும் பெட்டிகளாக மாறி வருகின்றன ,ஏனெனில் இதில் பழைய உணவுகளை சேமித்து வைத்து ,அதை சூடு ப்படுத்தி சாப்பிடுவதால் உண்டாகும் நோய்கள் பற்றி இந்தப்பதிவில் பார்க்க போகிறோம் 

1.சிலர் டீ மற்றும் காபியை மீண்டும் மீண்டும் சூடாக்கி குடிப்பர் .இப்படி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
2.காபி-டீயை மீண்டும் சூடேற்றினால்,அதன் சுவை மாறுவதோடு நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடுகிறது..
3.புரதச்சத்து அதிகம் உள்ள உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் அதிகமாகும்.உதரணமாக சிக்கன்,மட்டன், போன்றவற்றில் புரோட்டீன்  அதிகமாக உள்ளது. 
4.சிலர் சிக்கனைச் மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவர் .இப்படி சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும் .அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட்  பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும்.
5.சிலர் கீரையை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவர் .இப்படி கீரையை  சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை  உண்டாக்கும்
6.சிலர் முட்டையை சூடு படுத்தி சாப்பிடுவர் .முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக  மாறும். இது, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். 
7.சிலர் பருப்பு மற்றும் தானியங்களை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவர் .இப்படி சூடாக்குவதால் அதில் உள்ள புரதச்சத்து அழிந்துவிடும்.
8.சிலர் காளானை சூடு ப்படுத்தி சாப்பிடுவர் .இப்படி காளானை  இரண்டாம் முறை  சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
9..சிலர்  சாதத்தை சூடு படுத்தி சாப்பிடுவர் ,இப்படி திரும்ப சூடுபடுத்தினால் அதில் நச்சுத்தன்மை  அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும். 
10.உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. 
11.இதனால் வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.