என்னது !காபியில் வெண்ணெய் கலந்து குடிச்சா ,உடலில் இவ்ளோ அதிசயம் நடக்குமா ?

 
butter

காபியில் காஃபின் எனும் கலவை உள்ளது. இது மூளையில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காஃபின் மூளையில் சிறிய வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாதிப்பு என்பதை விட இதை ஒரு அதிர்வு என கூறலாம், இதனால் நமது மூளையில் எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கிறது. சில எச்சரிக்கையான தருணங்களில் இந்த உணர்வு நமது மூளையில் மேலோங்கி இருக்கும்.
காபி மூளை எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கிறது. இது உங்கள் மனநிலையில் சுறுசுறுப்பை ஏற்படுத்தும். எனவே சோர்வாக இருப்பவர்கள் மிக எளிதாகவே சகஜ நிலைக்கு திரும்புகின்றனர். எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் காபி அருந்துவதற்கான காரணம் இதுவே. பெரும்பாலான சமயங்களில் காபி பிரியர்கள் அதை செய்யும்போது ஆரோக்கியமாக செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு காபியின் முழு நன்மைகளும் கிடைப்பதில்லை.

இந்தியாவின் சில பகுதிகளில், தேநீருடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து குடிப்பது வழக்கமாகும். இது நமது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தருகிறது. ஆனால் நீங்கள் வெண்ணெய் கலந்த காபி குடித்து இருக்கமாட்டோம்? அதனை முதலில் குடிக்கும் பொழுது ருசி அவ்வளவு நன்றாக இருக்காது ஆனால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். எனவே காபியில் வெண்ணெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று நாம் இங்கே தெரிந்துக்கொள்ள போகிறோம்..

நல்ல கொழுப்பு மற்றும் கலோரிகளை அளிக்கும்:

காபியுடன் (Coffee) வெண்ணெய் கலந்து குடிப்பதால் உடலில் இருக்கும் கொழுப்பை செயல்படுத்துகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு மற்றும் கலோரிகளை அளிக்கிறது.

மூளையை சுறு சுறுப்பாக வைத்திருக்கும்:

காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பதால் மூளையை சுருசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது, அதே நேரத்தில் வெண்ணெய் மூளையில் இருக்கும் உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

எடை குறைக்க உதவும்:

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்:

மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு வேலை வெண்ணெய் கலந்த காபியை அருந்த வேண்டும். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது:

மாரடைப்பு உடலில் சேரும் கெட்ட கொழுப்பால் ஏற்படுகிறது. காபியுடன் வெண்ணெய் உட்கொள்வது உங்கள் உடலின் கொழுப்பைக் குறைக்க உதவி மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.