டாய்லெட் போகும்போது செல்போன் யூஸ் பண்ணுறவங்களுக்கு என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
toilet toilet

பொதுவாக சிலர் டாய்லெட்க்கு போகும்போது கையில் செல்போனை கொண்டு செல்வர் . இன்னும் சிலரோ கழிவறைக்கு செல்லும்போது செல்போனுடன் பத்திரிகை பேப்பரைகூட கொண்டு செல்வதுண்டு.இப்படி டாய்லெட்க்குள் செல்போன் கொண்டு செல்வதால் உண்டாகும் பாதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1. பொதுவாக கழிவறைக்குள் எடுத்துச் செல்லும் செல்போனை யாரும் சுத்தம் செய்வது கிடையாது. 
2.அப்படி சுத்தம் செய்யவில்லையென்றால், கழிவறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் தொற்றிக்கொண்டு நமக்கு பாதிப்பை உண்டு பண்ணும் . 
3.இப்படி செல்போனை டாய்லெட்டுக்கு கொண்டு போவதால்  நோய் பாதிப்பை உண்டாக்கிவிடும். 
4.நாம் கவனக்குறைவாக கழிவறைக்கு எடுத்துச்செல்லும் செல்போனில் 10 மடங்கு அதிக கிருமிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
5.நாம் அன்றாடம் கழிவறைக்கு எடுத்துச் செல்லும் செல்போனை சுத்தம் செய்யவில்லையென்றால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் நம் உடலில் சென்று வாந்தி, டைரியா போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தி  நம்மை நோயாளியாக்கி விடும் . 
6.சில நேரங்களில் அந்த செல்போன் கிருமியால் விஷமாக மாறி நம் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்.
7.இன்னும் சில நேரத்தில் செல்போனை கையில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருப்பதால், மலம் கழிக்க முடியாமல் போக வாய்ப்புண்டு 
8. இப்படி செல்போனை கொண்டு செல்வதால் ஆசனவாயில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 
9.நம் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ முடிந்தவரை செல்போனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். 
10.மேலும், செல்போன் இல்லாமல் உங்களால் இருக்கமுடியாதுதான். அந்த எண்ணத்தை தவிர்க்க வேறு வேலைகளில் உங்கள் கவனங்களை செலுத்தினால் ஆரோக்கியம் கிடைக்கும் .