எந்தெந்த பிரச்னை உள்ளவர்கள், வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும் தெரியுமா ?

 
butter

பொதுவாக நாம் உணவில் சேர்த்து கொள்ளும் சில பொருட்கள் நமக்கு பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்கி ,ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கி விடும் .இந்த பதிவில் யார் யார் வெண்ணெயை சேர்த்து கொள்ளலாம் ,யார் சேர்த்து கொள்ளல் கூடாது என்று பார்க்கலாம் 

1.வெண்ணெய் அதிகம் சேர்த்தால் பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். 
2.அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும்  
3.வெண்ணெய் அதிகம் சேர்த்தால் உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
4.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் வெண்ணெயை ஓரளவு எடுத்துக் கொள்ளலாம்.
5.மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது.
6.மேலும் சர்க்கரை நோயாளிகள், வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும்
7.இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும்
8.உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும்.
9.ஏனெனில் வெண்னெய் உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். 
10.உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் அதிகரித்து ஆரோக்கியத்தை கெடுத்து விடும்