ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி கிடந்த அடுத்த வீட்டு பையன் இப்ப எந்தெந்த நோய்க்கு அடிமையாயிருக்கான்னு தெரிஞ்சிக்கோங்க .

 
phone

இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளையும் அலங்கரிக்கிறது ஸ்மார்ட் போன். நவீன செல்லிடப்பேசிகளான 'ஸ்மார்ட் போன்'களை படுக்கைத் துணையாகக் கொண்டு உறங்குவதாக அண்மையில் மேற்கொள்ளபட்ட ஒரு சர்வதேச ஆய்வில் 74 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல்போய்விடுமோ என மனதளவில் பயப்படுவதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, 30 வயதுக்கு கீழ் உள்ள 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது சிஸ்கோ என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம். இதில், பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.

ஸ்மார்ட் போன் அடிமைகளா நீங்கள்? கண்டறிவது எப்படி?

நோமோபோபியா என்பது மொபைல்போன் தன் கையில் இல்லாத போது ஏற்படுகின்ற ஒரு அச்சம் தழுவிய நிலை.  இந்த மன நோய் சமீபத்தில் பரவலாக பலரிடம் காணப்படுவதாக   மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து மீண்டு வருவதற்கான மறுவாழ்வு மையங்களும் தொடங்கப் படுகின்றன.

முதுகு வலி:

ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு  பிறகு முதுகு வலி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  அதிகரித்துள்ளது என்று பிரிட்டிஷ் சிரோபிராக்டிக் அசோசியேஷன்  குறிப்பிடுகின்றது.

 

நரம்புகள் பாதிப்படைகிறது:

ஸ்மார்ட்போனை தொடர்ந்து உபயோகிப்பதால், குறுகிய கால பாதிப்புகளை தாண்டி நீணட காலபாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. Occipital neuralgia  என்ற நரம்பியல் நிலை   உருவாகிறது. இந்நிலையில் உச்சந்தலையில் இருந்து முதுகெலும்புக்கு  செல்லும்   நரம்புகள் சுருக்க படுகின்றன அல்லது வீக்கமடைகின்றன. இதனால் தீராத தலைவலி உண்டாகிறது.  இதனை  குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது. ஸ்டீராய்டு மற்றும் ஊசி, யோகா, மசாஜ் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும்  முடக்குவது போன்றவை  அந்த நேரத்து வலியை கட்டு படுத்தும்.

பதற்றம்  மற்றும்  மன அழுத்தம்:

நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் திரையினை பார்த்து கொண்டே இருப்பது ஒரு வித பதற்றத்தை மனதில் ஏற்படுத்துகிறது. போனில் நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தொடர்ந்து அவர்களின் பதில்களுக்காக காத்துகொன்டே இருப்பதால் இந்த சூழல் உருவாகிறது. எதிர்பார்த்தபடி பதில் வராத போது ஒரு அழுத்தம் உண்டாகிறது.

 

மொபைல் போனில் விளையாடும் ஒவ்வொரு நிமிடமும் நமது ஆரோக்கியமான நேரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் உடற் பயிற்சி, ஆரோக்கியமான சமையல், யோகா, வெளி உலகை காண்பது போன்ற சுவையான விஷயங்களை நாம் புறக்கணிக்கிறோம் .

எடை மேலாண்மை  மற்றும்  உடல்தகுதி:

ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் செல் போன்  பயன்பாடு, ஓய்வு நடவடிக்கைகள் மற்றும் உடல் செயல்பாடு பற்றி 300 கல்லூரி மாணவர்களிடம்  கணக்கெடுப்பு நடத்தினர்.

அவரக்ளின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை பரிசோதித்தனர். 14 மணி நேரம் தொடர்ந்து தொலைபேசியில் நேரத்தை செலவழித்தவர்களின் உடல் நிலை குறைந்த பட்சம் 1.5 மணி நேரம் செலவழிபவர்களின்  உடல் நலத்தை விட பின் தங்கி இருந்தது.

பாக்டீரியாவின் ஆதாரம்:

ரிசோனா பல்கலைக் கழகத்திலிருந்து செய்யும் ஆராய்ச்சியில்  , சராசரியாக  ஒரு கழிப்பறை இருக்கையில் காணப்படும் பாக்டீரியாக்களின் அளவைவிட   10 மடங்கு அதிகமாக  ஒரு ஸ்மார்ட் போனில் உள்ளது என்று  கண்டறியப்பட்டுள்ளது!

கேட்கும் திறன்:

சாதாரணமாக அலைபேசியில் காதை வைத்து பேசுவதால் காதுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஹெட்போன் உபயோகித்து இசை அல்லது பாடல்கள் கேட்கும் போது  சற்று கவனமாக இருக்க வேண்டும்.

காதின் உட்புறம் சிறு சிறு முடிகள் வளர்ந்திருக்கும். இவை இரசாயன சிஃனல்களை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. அதிக அளவு சத்தத்தால் இந்த முடிகள் சேதமடையலாம்.

85 டசிபீல்களை விட அதிகமான சத்தங்கள் வெளிப்படுத்தப்படுவது, கேட்கும் திறனில் இழப்பு ஏற்படுத்தும் என்று பொது சுகாதார பிரச்சாரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஸ்மார்ட் போனின்  அதிகபட்ச அளவு 105 டிசிபில்கள் ஆகும் குறைந்தபட்சம் 94 டிசிபில்கள் ஆகும்.

சமூகவிளைவுகள்:

ஸ்மார்ட் போன்கள் நம்மை இந்த சமூகத்துடன் இணைப்பதை காட்டிலும் அதிகமாக தனிமை படுத்துகிறது. நம் ஆழ் மனதிலிருந்து கூட நாம் தனிமைப்படுத்த படுகிறோம். ஸ்மார்ட் போனை அதிகம் சார்த்திருப்பவர்கள் அவர்கள் துணையுடனான தருணங்களை கூட அர்த்தமற்றதாக உணர்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதன் பயன்பாடு நம்மை ஒரு சுயநலவாதியாக மாற்றுகிறது. சமுதாயத்திற்கோ அல்லது நம்மை சார்த்தவருக்கோ நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகி மனித தன்மை அற்றவனாக மனிதன் மாறுவதாக தெரிகிறது இந்த ஸ்மார்க் போனின் பயன்பாட்டால்.