கலர் கலர் மாத்திரை சாப்பிடுறத நிறுத்த உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க

 
dry grapes benefits dry grapes benefits

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் உண்டு. பொதுவாக உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உண்டு.

உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும். அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். உடல் வெப்பம் தணிவதற்கும் உலர் திராட்சை பெரிதும் பயன்படுகிறது. பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.

உலர் திராட்சையை கொதிக்க வைத்து, மசித்து தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். சுகமான தூக்கத்திற்கு பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி வடிகட்டிய பாலை அருந்தினால் போதும். உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன. ஆண்கள் விறைப்புத் தன்மை குறைப்பாட்டில் அவதிப்பட்டால், நாள்தோறும் உலர் திராட்சைகளை ஒரு கையளவு உட்கொள்ள வேண்டும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வாகவும் இருக்கின்றன. எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் உலர் திராட்சை அதிகம் உள்ளது.

அதிலும் இந்த உலர் திராட்சைகளை நாம் நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உடல் பிரச்சனைகளைத் தடுக்கலாம். எனவே நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்ப்போம்.

Dry Grapes benefits in Tamil

* ரத்த சோகை: ரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

* ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டை போக்கும்: ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

* மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்: மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்

* மலச்சிக்கல் தீரும்: மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.