தூங்கறதுக்கு முன்னாடி அஞ்சு உலர் திராட்சை சாப்பிட்டா எந்தெந்த பிரச்சினைகள் பஞ்சாய் பறந்துடும் தெரியுமா ?

 
dry grapes benefits dry grapes benefits

உலர் திராட்சையில் எக்கச்சக்க நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் உலர் திராட்சையை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தூக்கமின்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் சாப்பிடுவது நல்லது.

உலர் திராட்சையானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும்.

உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கவும் திராட்சை உதவுகிறது.

 உலர் திராட்சையில் நிரம்பி இருக்கும் இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. எனவே தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை பிரச்னை குணமாகும்.
 உடல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது சத்தான ஆகாரங்கள் மற்றும் உணவு பொருட்கள். தினமும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்க்கலாம். இதில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுப்பதும், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உலர் திராட்சை முக்கிய பயனை கொடுக்கிறது.

தினமும் இரவில் ஆறு கருப்பு திராட்சைகளை ஊற வைத்து. மறுநாள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சையை சாப்பிடுங்கள். ​​இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் நமது முன்னோர்கள் கருப்பு திராட்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு சிறந்ததாக இருக்கும் என்று நம்பினர்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும்.

தினமும் படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 5 காய்ந்த திராட்சையை பாலில் போட்டு காய்ச்சியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் சுகமான தூக்கம் வரும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்க்கொண்டால் இரத்தசோகை குணமடையும

உலர் திராட்சை எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும்

 

உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது