ஒரு லிட்டர் 7000 ரூபாய் விற்கும் இந்த பால் செய்யும் அற்புதங்கள்

 
milk

ஒரு காலத்தில் பொதி சுமக்கவும் ,அழுக்கு துணிகளை சுமக்கவும் பயன்பட்டு வந்த கழுதைக்கு இன்று அதிக மவுசு கூடியுள்ளது .கழுதையின் பால் பல நோய்களை குணப்படுத்தும் என்ற கருத்து மக்களிடையே நிலவுவதால் அந்த பாலை வாங்க குழந்தையுடன் பலர் கழுதையை துரத்துகின்றனர் .

donkey

எகிப்து  பேரழகி கிளியோபட்ரா தனது தோலின்  தோற்றத்தை மேம்படுத்த கழுதைப் பாலில் குளித்திருக்க வேண்டும் என்ற சொல் நீண்டகாலமாக இந்த உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது .இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை ரூபாய் 7000 ஆக உள்ளது.கழுதைப் பாலில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது .இதில் முதுமையை தள்ளி போடும் பண்பு  மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.

1.கழுதைப் பாலில் பசுவின் பாலை விட வைட்டமின் சி,கால்சியம்  நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

இதனால் இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

2. இன்றும் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு ஏற்ப்படும்   ஆஸ்துமா, சளி, இரும்பல், மஞ்சள்காமாலை, கீல்வாதம், ஆகியவற்றை கழுதைப்பால் மூலம் குணப்படுத்த முடியும் என்று நினைக்கின்றனர் .இதை  இந்திய சித்த மருத்துவமும் தெரிவிக்கிறது.

3.தாய்  பால் போன்றே  கழுதைப்பால்  வைரஸ்கள் மற்றும்  பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கக் கூடியதாக உள்ளதால் இதற்கு டிமாண்ட் கூடியுள்ளது .

4.. கழுதை பாலின்   புரதங்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு   மருந்தாகும் என்ற கருத்தால் அதற்கு மேலும் மவுசு கூடியுள்ளது

5.ஆய்வின்படி கழுதைப் பாலில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது கழுதைப்பால் மனித பாலுடன் மிக நெருக்கமான பண்புகளை கொண்டுள்ளது.

6.கழுதைப்பால் குறைவான கலோரிகள் மற்றும் அதிக அளவில் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் ,கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.