குண்டான உடலுக்கு உண்டாகும் நோய்கள் பட்டியல்
![Belly Fat](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/cf45f20e92105a85891bc5205819186d.jpg)
பொதுவாக இயற்கையான முறையில் நம் உடல் எடையை குறைக்கும் முயற்சி எடுத்து எடையை குறைத்து கொள்ளுங்கள் ,மேலும் உடல் பருமனால் நம் உடல் உறுப்புகளில் என்னென்னெ பாதிப்புகள் வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் பருமன் அதிகமானால் கல்லீரலில் அதிக்கப்படியான கொழுப்பு படிப்படியாக சேர்ந்து கல்லிரல் செயல்பாட்டை பாதிக்கும்
2.உலகில் அதிக அளவில் நீரிழிவு நோய்க்கு அடிப்படையாக அமைவது பெரும்பாலும் உடல் பருமன் அதிகரிப்பதால் மட்டுமே மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்கள் அடங்கும்.
3.உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும் ஏனென்றால் இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது
4.உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியகூறுகள் உள்ளன.
5.உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
6.உடல் பருமன் அதிகமானால் சிறுநீரகக் கற்கள் அல்லது செயலிழப்பு நிகழலாம்..
7.உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதை கடினமாகும்.
8.உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் உடல் பருமன், எலும்பு முறிவுகள், உடல் இயலாமை, போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.