மன அழுத்தம் காரணமாக எந்தெந்த நோய்கள் உண்டாகும் தெரியுமா ?

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக நம் மனம் ஆரோக்கியமாய் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் இருக்கும் .ஆனால் இன்று பலர் மன ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு ஆரோக்கியமின்றி நோய்களுடன் போராடி வருகின்றனர் .இன்று ஏற்படும் நோய்களுக்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.இன்றைய காலச் சூழலில் அனைவரும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 
2.இதனால் சரியான ஓய்வினை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
3.காற்று , மண் மற்றும் நீர் மாசுபாட்டால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் உண்டாகிறது 
4.மேலும் இந்த சுற்று சூழல் மாசு ,குழந்தைகளின் மூளையை பாதிக்கும் நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது.
5.மாசு காரணமாக நடைமுறை வாழ்கை சரியில்லாமல் போனால் அது  மாரடைப்பு வருவதற்கு வழிகோலும். 
6.மேலும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களினால் உடலில் பல நோய்கள் உண்டாகின்றன.
7.புற்றுநோய், இதய நோய் போன்ற பல கொடிய நோய்கள் ஏற்படுவதற்கு சிலரின் தவறான வாழ்க்கை முறை காரணமாகிறது.
8.மேலும் சிலருக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும் .இந்த உணர்ச்சிகள் நமது மனதிலும், உடலிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
9. சிலருக்கு இருக்கும் மன அழுத்தம் காரணமாக ஏற்கனவே இருந்த நோய்கள் மேலும் கூடுவதற்கும், புதிதாக நோய்கள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
10.உதாரணமாக எக்ஸிமா என அழைக்கப்படும் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், உயர் ரத்த அழுத்தம், குடல்புண் ,மார்பு வலி போன்ற நோய்கள் மன அழுத்தத்தினால் மேலும் கூடும்.
11. வேலை காரணமாக இன்று காலை உணவைத் தவிர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். இச்செயற்பாடு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.