ஜில்லுன்னு தண்ணீர் குடிப்பவர்களை வச்சி செய்ய காத்திருக்கும் நோய்கள்

 
water

பெரும்பாலானோர் சூடு தண்ணீர் குடிப்பதை விட குளிர்ந்த தண்ணீர் குடிக்கவே விரும்புகின்றனர். ஆனால் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு பலவகையான நோய்களை ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர் இளம் வயதில் உள்ள போது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால், அது வயதான காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உலகில் முக்கால்பங்கு நீராகவும், கால் பங்கு நிலமாகவும் அமைந்துள்ளது. அதே போல நமது உடலிலும் 60 முதல்70 சதவீதம் திரவப் பொருள்களே உள்ளன. நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், பருகும் நீரின் மூலமாகவும் நமது உடலுக்கு தேவையான நீர் கிடைக்கின்றது. வளர்ந்த வாலிப பருவத்தில் உள்ளவர்கள் 2 முதல் 2½ லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அருந்தலாம். உடல் எடைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் நாம் அருந்தும் நீரின் அளவு மாறுபடும்

1.புற்றுநோய்:

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் நம் வயிற்றின் உள் சுவர்களை பாதித்து, பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உடலில் ஏற்படும் நோய்களில், 75 சதவீதம் குடிநீரால் தான் வருகிறது. வாந்தி, பேதி, டைபாய்டு, காலரா போன்றவை, தண்ணீர் மூலம் தான் பரவுகின்றன.
ஐஸ் வாட்டர் குடிக்க விரும்புபவர்கள், காய்ச்சிய நீரை குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்து, பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வெறுமனே சூடுபடுத்திக் குடிக்காமல், நன்கு கொதிக்க வைத்தால் தான் அதிலுள்ள கிருமிகள் மடியும். குடிநீர் தான் மனித உடலின் ஆதாரம். அந்த நீரை காய்ச்சிக் குடித்து, நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

water
2.உடல் எடை அதிகரிப்பு:

நாம் எண்ணெய் பலகாரம் சாப்பிட்டு விட்டு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது கொழுப்பாக சேர்ந்து நமது உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

3.கல்லீரல் பிரச்சனை:

கல்லீரலை மாற்ற வேண்டும் என காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடித்ததனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். குளிர்ந்த நீர் கொழுப்பை கல்லீரலில் சிக்க வைத்து கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.