பேர் சொல்ல பிள்ளை வரம் கொடுக்கும் பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க

 
child eat

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்


* வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். 
* மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
* பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

webdunia

இரத்த சோகை குணமாகும்

இரும்பு சத்து குறைவால் ஏற்படும் மந்தநிலை, சோர்வு போன்ற பிரச்சினைகள் பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதால் நீங்கும். இரத்தத்தில் இரும்புச் சத்தை அளவை அதிகரிக்க பேரிச்சம் பழத்தை தினமும்  உட்கொள்ளுங்கள்.

வலுவான எலும்புகள்

பேரீச்சம் பழங்களில் உள்ள தாதுக்கள்  எலும்புகளை வலுப்படுத்துவதற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புகளை பலவீனப்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு தேவையான  மாங்கனீசு, செலினியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் இதில் உள்ளது. எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3-4 பேரீச்சம் பழங்களை உட்கொள்வது ஆரோக்கியமான எலும்பை உறுதிசெய்யும்.

கொழுப்பு

பேரீச்சம் பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்க்கள் உள்ளது, இது எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பைக் குறைக்கிறது.  இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. தமனிகளில் கொழுப்பு படிவதை தடுக்கிறது, இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதய பிரச்சினைகளை தடுக்கும்

பேரீச்சம் பழங்களை  இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் நசுக்கிய பின் உட்கொள்ளுங்கள். பேரீச்சம் பழங்கள்  உடலில் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, இது பக்கவாதம், இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வாரத்திற்கு இரண்டு முறை 3 பேரிச்சம் பழங்களை உட்கொள்ளுங்கள்.

குடல் ஆரோக்கியம்

பேரீச்சம் பழத்தில் நிகோடின் உள்ளது, இது பல்வேறு குடல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  குடல்களில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத இழைகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன, இவை உணவு செரிமானப்படுத்துவதை ஊக்குவிக்கின்றன, மேலும் ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தால் சரியாக உறிஞ்சப்படுகிறது.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

பேரீச்சம் பழம் மலச்சிக்கலை நீக்கும், மலச்சிக்கல் நீங்க பேரீச்சம் பழங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் பழத்தை மசித்து  அதை உட்கொள்ளுங்கள். பேரீச்சம் பழத்தில் உள்ள  நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களை ஊக்குவிக்க உதவுகின்றன மற்றும் மலச்சிக்கல் நீங்க உதவுகின்றன. 

இரத்த அழுத்தம் சீராகும் 

பேரீச்சம் பழங்களை மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இருப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுகிறது.

மலட்டுத்தன்மை நீங்க

பேரீச்சை பழங்களில் உள்ள எஸ்ட்ராடியோல் மற்றும் ஃபிளாவனாய்டு கூறுகள் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் இயக்கத்தையும் அதிகரிக்க உதவுகின்றன என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஒரு சில பேரீச்சம் பழங்களை ஆட்டின் பாலில்  இரவில் ஊறவைத்து, காலையில் அவற்றை அதே பாலில்  ஏலக்காய் தூள் மற்றும் தேன் அதை உட்கொள்ளுங்கள்.