டைனிங் டேபிளில் உக்காந்து சாப்பிடுவதில் உடலுக்கு இவ்ளோ டேஞ்சர் இருக்கா?

 
how to eat for health life

டைனிங் டேபிள்களும் குஷன் மெத்தைகளும் ராஜாராணி கட்டில்களும் நம்மைத் தரையிலிருந்து பிரித்து மிகவும் வசதியாக நம்மை மிதக்கச் செய்துவிட்டன. வசதி வாய்ப்பு கூடிப்போனதால் நாம் இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்; கூடவே நோய்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குனிந்து நிமிர்ந்து இடுப்புப் பகுதிக்கு பயிற்சி கொடுக்க அவகாசம் இல்லாததால், இடுப்பைச் சுற்றி சதைத் தொகுப்புகள் திரண்டு உருண்டு நிற்கின்றன. சம்மணம் போட்டு வேலைகளைச் செய்தபோதும்  உட்கார்ந்து சாப்பிட்டபோதும்  நமது உடலில் இயல்பாக இருந்த நெகிழ்வுத் தன்மையை இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறோம். 

உணவகங்கள், திருமண நிகழ்வுகள், பொது இடங்கள் என எங்கு சென்றாலும், அங்கிருக்கும் மேஜை நாகரிகத்துக்கேற்ப நாமும் பழகிவிட்டோம். விளைவு... அதே பழக்கம் வீடுகளிலும் தொடர் கதையாகிவிட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பரிணாம வளர்ச்சி! வெளி இடங்களுக்குச் செல்லும்போது சம்மணம்போட முடியாவிட்டாலும் வீட்டிலாவது சம்மணமிடும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

 குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் காக்க, வீட்டிலிருக்கும் டைனிங் டேபிளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, தரையில் அமர்ந்து உண்டு, உரையாடிக் களிப்போம். 

இயற்கையாக உங்கள் உடலமைப்பை மெறுகேற்றுதல் :

தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. தற்போது டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

தரையில் சம்மணம் போட்டு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்பது முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

தரையில் அமர்ந்து சாப்பிடும் போது குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிறு தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது.

தரையில் அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மூளை நமக்கு தெளிவாக சொல்லி விடுகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.

நாம் ஒரு குடும்பமாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது மன அமைதி கிடைக்கிறது. மேலும் நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும் முடிகிறது.

தரையில் அமர்ந்து சாப்பிடும் போது நமது முதுகெலும்பும் தோள்களும் சீரான நிலையில் இருக்கும். மேலும் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும்.

டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது புவி ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கு ரத்தம் பாய்கிறது. ஆனால் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது ரத்த ஓட்டம் இதயத்தில் மட்டுமே சீராக இருக்கும். இதனால் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.