தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஆபத்து

 

தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஆபத்து

முன்பெல்லாம் தமிழக மக்கள் காலையில் எழுந்த உடனேயே ஒரு சொம்பு நீராகாரம் குடிப்பார்கள். கடினமாக வேலைகள் செய்வதால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பகல் முழுவதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது அப்படியல்ல. ஏசி அறையில் அமர்ந்து, உடல் உழைப்பே இல்லாமல் கணீணி வேலைகளைத்தான் அதிகம் பார்க்கிறார்கள் இதனால் இவர்களுக்கு அதிகம் வியர்ப்பதும் இல்லை. தண்ணீர் தாகமும் எடுப்பதில்லை.

தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஆபத்து


பொதுவாக ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேன்டும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் இதுதொடர்பாக, ஆய்வுகள் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஆபத்து

அதில், நாள்தோறும் 2 லிட்டருக்கும் குறைவான தண்ணீரை குடிப்பவர்களுக்கு, சிறுநீர்த்தொற்றுநோய் ஏற்படலாம் எனத் தெரியவந்துள்ளது. குறைவாக நீர் அருந்துவதால், சிறுநீர்ப் பை, சிறுநீரகம் மற்றும் அதன் துவாரம் போன்ற இடங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா நாளடைவில் நன்கு வளர்ந்து, இருமல், குளிர், சளி, காய்ச்சல் போன்றவற்றை கொண்டு வருகிறது. இந்த நீர்ச்சத்துக் குறைபாட்டை தொடக்கத்திலேயே சரிசெய்யாவிட்டால், படிப்படியாக, உடல் இயக்கத்தையே நிறுத்தும் அளவுக்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.