மலசிக்கல் பிரச்னைகளை தீர்க்கும் இந்த காய்
பொதுவாக நாம் அதிகம் சாப்பிடாமல் ஒதுக்கும் காய்களில் தான் நம் உடல் ஆரோக்கியம் ஒளிந்துள்ளது .அதன் படி பாகற்காயை சாப்பிடாமல் ஓதுக்கி வைப்போம் ஆனால் அதில் ஏரளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அது போல நாம் அதிகம் சாப்பிடாத வெள்ளரியில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.தினமும் ஒரு வெள்ளரியை சாப்பிட்டால், மலசிக்கல் பிரச்னைகளை அது தீர்க்கும்.
2.வெள்ளரியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து ஆகியவை உள்ளன. இவை எலும்புக்கு பலன் அளிக்கக்கூடியவை.
3.வைட்டமின் கே சத்துக்கு எலும்பு முறிவு அபாயத்தை தடுக்கும் ஆற்றல் உண்டு. கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ளவும் வைட்டமின் கே உதவுகிறது.
4.மேலும் முடக்குவாதத்தினால் ஏற்படும் வலி மற்றும் வேதனையிலிருந்து வெள்ளரி நிவாரணம் அளிக்கிறது . 5.முதுமையின் வாசலில் இருப்போர் வெள்ளரியை சாப்பிடுவது அவசியம்.
6. வெள்ளரியில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் வைட்டமின் கே சத்தும் உள்ளன. இவை மூன்றுமே இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவையாகும்.
7.மெக்னீசியமும் பொட்டாசியமும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. தொடர்ந்து வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு உடலில் குறைகிறது.
8.கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் வெள்ளரியில் உள்ளது.
9.இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும்.
10.வைட்டமின் கே இரத்தத்தில் கால்சியத்தின் அளவை சீராக பராமரிக்கிறது.
11.இரத்த உறைதலுக்கும் இது உதவுகிறது. ஆகவே, வெள்ளரி சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்..


