என்னது !தேங்காய்பாலும் தேனும் கலந்து குடிச்சா ,இத்தனை நோய் பறந்து போகுமா ?
ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இதன் காரணமாக இது சருமத்திற்கு மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும். தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது சருமத்தை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட தேங்காய் பாலில் டீ அருந்துவது உங்கள் சருமத்தை அற்புதமாக வைத்திருக்க உதவும்.
கொரோனா வைரஸைத் தவிர்க்க தேங்காய் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில், நீங்கள் தேங்காய் பால் டீயை அருந்தினாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தேங்காயில் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.தேங்காயில் உள்ள எச்டிஎல் கொலஸ்ட்ரால், லாரிக் அமிலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்
மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கை உணவுகளில் முக்கிய அமுதமாக இருப்பது தேன். ஒரு தேக்கரண்டி தேனில் கொழுப்பு மற்றும் சோடியம் இல்லாத 64 கலோரிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த தங்க திரவம் மனித இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்த்த்தை போக்குகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளில் சிறப்பாக விளங்குகிறது. தேன் சரும ஆரோக்கியத்தையும், இரைப்பைக் குழாயின் உள்ளே இருக்கும் சிறிய காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட தேன் மனித ஆரோக்கியத்திற்கு பெரிதும் எதவுகிறது.
![]()
தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் தேங்காய், தேன் இந்த இரண்டுமே தனித் தனியாக மனித உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் உடையது. நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது. வந்த நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது. இருந்த போதிலும் இவை இரண்டையும் கலந்து குடித்து வந்தால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்ற பட்டியலில் இருந்து ஒன்றினை இங்கு காண்போம். எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சுத்தமான தேங்காய் எடுத்து அதன் பாலை தனியே பிரித்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் ஆறும். உடலும் வலுப்பெறும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


