கொலஸ்ட்ராலை கொல்லும் இந்த பழம்

 
cholestral

நம் உடலுக்கும் கர்ப்பிணிகளின் உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .இதில் உள்ள பல வைட்டமின் சத்துக்கள் கர்பிணிகளின் சுக பிரசவத்துக்கு உதவுகிறது .மேலும் குழந்தை பெற்ற  பிறகு கர்ப்பிணிகளின் எடை கூடாமல் காக்கிறது .இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தம் முதல் இதய கோளாறு வரை வராமல் நம்மை காக்கிறது

dates

மேலும் எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. சீரான, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும். ஆதலால் தினமும் ஒருவர் மூன்று  பேரிச்சம் பழம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .

சர்க்கரை அளவை சீராக்குகிறது:

பேரிச்சம்பழத்தில் , பக்கவாதம், இதயம் சார்ந்த பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. இவை உடலுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் இருக்கும், மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி சுகர் பேஷண்டுகளை தாயை போல் காக்கிறது .

பேரிச்சம் பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே உயர்இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டு இதய பிரச்சனை ஆயுளுக்கும் வராமல் தங்களின் உடலை பாதுகாப்பாய் வைத்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்