நீண்ட நேரம் செல்போனுடன் டாய்லெட்டில் இருந்தால் ,உடலின் எந்த பகுதியெல்லாம் பாதிக்கும் தெரியுமா ?

 
toilet

டாய்லெட்  என்பது நம்முடைய உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடமாக இருக்கிறது. அங்கு பலர் செல்போனை பயன்படுத்கின்றனர் .அங்கு செல்போனை பயன்படுத்துவதால் டாய்லட்டில் உள்ள கிருமிகள் எல்லாம் செல்போனில் படிந்து விடும் .பின்னர் சோப் போட்டு கைகளை கழுவினாலும் அந்த செல்போனில் படிந்த கிருமிகள் நம்முடனே  வந்து விடும் .அதனால் செல்போனுடன் நீண்ட நேரம் டாய் ல ட்டில் இருக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 

cellphone affects male

டாய்லெட்டில்  அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்உண்டாக வழி வகுக்கும் . இப்படி அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதால் மல சிக்கலை ஏற்படுத்தி நிம்மதியில்லாமல் இருக்க செய்யும் 

இப்போதெல்லாம் கழிவறையில் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது .குறிப்பாக டீனேஜ் பருவத்தினர் இந்த தவறை செய்கிறார்கள் 

இப்படி கழிவறையில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் உடலில் நிறைய உபாதைகள் உண்டாவதாக டாக்டர்கள் கூறுகின்றனர் 

கழிப்பறையில் அதிகபட்சம் 10ல் இருந்து15 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கலாம். நீண்ட நேரத்தை அங்கு  செலவிடுவது உங்கள் மலக்குடலில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதோடு மூல நோய் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். அதைத் தொடர்ந்து மலக்குடல் சரிவு ஏற்பட்டு அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டு நாள் முழுவதும் தொல்லை தருகிறது 
தொடர்ச்சியாக கழிவறைக்குள் செல்போன் பயன்படுத்துபவர்கள் பலருக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது .