வயிற்றில் கேன்சர் உருவாகுதுன்னு தெரிந்து கொள்ள உதவும் அறிகுறிகள்

 
cancer

 இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்த வகை நோயினை ஆரம்பகாலத்தில் அறிகுறிகளை வைத்து கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல.   தற்போது எந்த மாதிரியான அறிகுறிகளை வைத்து வயிற்று புற்றுநோய் இருப்பதை நாமே தெரிந்து கொள்ளலாம் என்று பார்ப்போம் 

1.நீங்கள் உண்ணும் உணவோ அல்லது பருகும் பானங்களோ எதுவாயினும்  அனைத்தும் வாந்தி மூலம் வெளியேறுவது அடிக்கடி நடக்குமானால் இது புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.  

food
2.வயிற்றில் வீக்கம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதும் இதன் அறிகுறியாகும்.  
3.குறைவான உணவை உண்ட பிறகும் தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருக்குமானால் நீங்கள் கவனிக்க வேண்டும்.  
4.நீண்ட நாட்களுக்கு பசியின்மை மற்றும் குறைந்த உணவு சாப்பிட்டாலே நிறைவான உணர்வு ஏற்படுவதும் இந்நோயின் மற்றுமொரு அறிகுறியாகும்.  

5. சில நாட்களுக்கு மேல் 100.5 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.   6.வயிற்றுவலி, நாள்பட்ட வயிற்றுவலி இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் உடனே சென்று பரிசோதிக்க வேண்டும். 
 7.உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படும், 
8. மலத்தில் இரத்தம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.  
9. குறைந்த இரத்த சிவப்பணுக்கள் அல்லது இரத்த சோகை என்பது வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.