சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சுவையான சில காலை உணவுகள்
பொதுவாக சுகர் பேஷண்டுகளின் எண்ணிக்கை நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது .இந்த சுகரை கட்டுப்பாட்டுடன் வைக்க வில்லையென்றால் உடலில் பல்வேறு தொல்லை உண்டாகும்
இக்கட்டுரையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சிறப்பான மற்றும் சுவையான சில காலை உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, காலை வேளையில் அவற்றை உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
1.இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள ஸ்மூத்தி ஏற்றதாக இருக்கும்.
2.அதுவும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள பொருட்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரிக்க வேண்டும்.
3.இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் ஸ்மூத்தி தயாரிப்பதற்கு முக்கிய பொருளாக கொழுப்பு இல்லாத பால், கொழுப்பு இல்லாத தயிர், பாதாம் பால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
4.அடுத்ததாக இந்த ஸ்மூத்தியுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான பழங்களை சேர்க்கலாம்
5.மற்றும் அந்த ஸ்மூத்தியில் காய்கறிகளான ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், ப்ளூபெர்ரி,சேர்க்க வேண்டும்
6.மற்றும் அந்த ஸ்மூத்தியில் அவகேடோ, வெள்ளரிக்காய், சேர்க்க வேண்டும்
7.மற்றும் அந்த ஸ்மூத்தியில் பசலைக்கீரை, கேல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
8.சுகரை கட்டுப்படுத்தும் அந்த ஸ்மூத்தியின் மேலே நார்ச்சத்து அதிகம் நிறைந்த நட்ஸ், ஆளி விதை அல்லது சியா விதைகளைத் டாப்பிங்காக பயன்படுத்தலாம்


