நாள் முழுவதும் மூளை சுறுசுறுப்பாக இருக்க நாலு வழிகள்

 
brain

ஒரு மனிதனின் அனைத்து செயல் பாடுகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது .அதனால் அந்த மூளை சுறுசுறுப்பாக இயங்க நாலு விஷயத்தில் நாம் கவனமாய் இருக்க வேண்டும் .அந்த மூளைக்கு தேவையான நாலு விஷயங்களை பட்டியலிட்டுள்ளோம் 
1.தூக்கமின்மை
ஒரு மனிதனின் மூளை ஆரோக்கியமாக செயல்பட தூக்கம் அவசியம் .தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்கி விட வேண்டும் அப்படி இல்லை என்றால் மூளைக்கு முழுமையான ஓய்வு கிடைக்காமல் .
போதிய அளவு ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் போகும்.இதனால் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளை ஒழுங்காக செயல்படாது

brain.

2.அளவுக்கு அதிகமான கோபம் அல்லது மன அழுத்தம்
சிலர் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படும் பழக்கம் இருக்கும் . அல்லது ஓவராக  சிந்தனை செய்து மன அழுத்தத்துடன் இருப்பார்கள் .இந்த இரண்டும்   மூளையின் செயல்பாடுகளை படிப்படியாக பாதித்து ,மூளையால் புதிய சிந்தனையில் ஈடுபட முடியாது  என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

அதாஉ மட்டுமல்லாமல் சிலர் முன் கோபக்காரராக இருப்பர் .அதனால் அப்படி கோபப்படும்போது மூளை நரம்புகள் மீது அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு , இதனால் மூளையின் பவர் குறைந்து நம்மால் ஆக்டிவ் ஆக செயல்பட முடியாது .

3.காலை உணவைத் தவிர்த்தல்
 சிலர் எந்நேரமும் ஆபீஸிற்கு செல்லும் போது காலை சிற்றுண்டி சாப்பிடுவதை தவிர்த்து விடுவது உண்டு இப்படி காலையில் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் மூளையின் செயல்பாடுகளை அளவுக்கு அதிகமாக பாதிக்கும், இதனால் உடலுக்கு தேவையான சக்தியும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போய் சோர்வுடன் செயல்படுவது உண்டு .

4.அதிக சர்க்கரை சாப்பிடுவது
 சிலர் சுவீட் பிரியராக இருப்பர் .இப்படி அதிக இனிப்புகள் சாப்பிடுவது மூளையின் செயல்திறனை பாதித்துவிடும்.மேலும் இந்த இனிப்பு சுவை  அந்த நபரின் அறிவாற்றலை பாதிக்கும்  .