பிபி மாத்திரை சாப்பிடாமலே பிபியை நார்மலாக வைக்கும் நாலு வழிகள்

 
bp

மனிதனுக்கு இயற்கையாகவே வயதாக ஆக ரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வுத்தன்மையை இழப்பதால், ரத்த நாளங்களின் அகலம் குறுகி ரத்த அழுத்தம் கூடுகிறது . இது பரம்பரையாக  மட்டுமின்றி, அதே உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலேயே வாழும்போது குழந்தைகளுக்கும் பிபி வரும் வாய்ப்புள்ளது . தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே காரணமென்று மருத்துவ ஆய்வு கூறுகிறது 

bp

உடல் எடை கூடிக்கொண்டே போனாலும்  ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது
உணவில் எப்போதும் அதிகம் உப்பு சேர்த்துக் கொண்டு சாப்பிடுவோருக்கு இந்த பிபி வாய்ப்பு அதிகம் 
அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள்
மது மற்றும் புகைப் பழக்கம் உள்ளோருக்கு பிபி வரலாம் 
சரியான உடற்பயிற்சி இல்லாமல் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்போருக்கும் இந்த பிபி வரலாம் 
நீரிழிவு நோய் உள்ளோருக்கு பிபி வரலாம் 

 இந்த பிபி யை  மாத்திரையில்லாமல் தவிர்க்கும் வழிகள் 
எப்போதும் வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை சாப்பிட வேண்டும். முந்தைய வேலை உணவு   செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது.  விரதம் என்ற பெயரில் நீண்ட பட்டினி கிடந்தாலும் இரத்த அழுத்தத்திற்கு அதிகமாக காரணமாக அமையும்.  

அடிக்கடி ஆயிலில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவு  வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் பிபி அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம் 

எப்போதும் மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், சதா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கமும் பிபி அதிகரிக்கும் ,அதனால் இதை தவிர்க்கலாம் 

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் 
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 
காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவு அருந்திய உடன் தூங்கச் செல்லக்கூடாது. இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.  
இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரத்த அழுத்தம் நோய் வராமல் ஏற்படாமல் தடுக்கலாம்
மேற்கூறிய வழிகளை அதிக சிரத்தையுடன் கடை பிடித்தால்  மாத்திரை இல்லாமல் பிபியை கண்ட்ரோலில் வைத்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்