எலும்புகள் வீக்காகாமலிருக்க இதை நீக்காமல் சாப்பிடுங்க

 
bone

  

மனித உடலில் எலும்புகள் தேய்ந்து விட்டால் அது மூட்டு வலி முதல் இடுப்பு வலி வரையிலும் ,கால் வலி ,கை வலி போன்றவற்றை கொண்டு வந்து விடும் .அதனால் எலும்புகள் தேயாமல் அவற்றை பாதுகாக்க வேண்டும் .அதற்கு சில உணவுகள் மிக உதவி கரமாக இருக்கும் .அவற்றை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்

bone

காய்கறிகள்:

. முருங்கைகாய், பீட்ரூட்,

தாமரைத்தண்டு, வெண்டைக்காய் மற்றும்

சுண்டைக்காய் போன்றவற்றில் கால்சியம்

அதிகமாக உள்ளது.இந்த பொருட்களை உணவில் சேர்த்து வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம்

பிரண்டை:

 தினம் இரண்டு தேக்கரண்டி

வீதம் பிரண்டையை சாப்பிட்டு வந்தால் எலும்பு

தேய்மானத்திலிருந்து குணமடையலாம்

இது எலும்பு தேய்மானத்த்தை வரவிடாமல் தடுத்து நம் உடலை காக்கும் தன்மையுடையது

பால் பொருட்கள்:

குழந்தைகள்

ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி.

பால் அருந்தி வந்தால் அவர்களுக்கு அதன் மூலம் கால்சியம் கிடைத்து வலுவாக இருப்பார்கள்

கேழ்வரகு:

குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை

கீரை கலந்து அடையாக செய்து சாப்பிட

கொடுத்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு தேயாமல் உறுதியாக இருப்பார்கள்