இதனுடன் லவங்கப்பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயெல்லாம் ஓடிப்போகும் தெரியுமா ?

 
pattai pattai

பொதுவாக தேன் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்க கூடியது ,அது போலவே இலவங்க பட்டையும் பல மருத்துவ குணம் உடையது .இவ்விரண்டையும் சேர்த்து உண்ண நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம் .இது பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.வாய் துர்நாற்றம்  உள்ளவர்கள் தினமும் காலையில் தேனையும், லவங்கப்பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போய்விடும்.
2. காது மந்தம்  உள்ளவர்கள் தேனையும், லவங்கப்பொடியையும் சம அளவில் கலந்து இருவேளைகளிலும் சாப்பிட்டு வர காது மந்தம் குணமாகிவிடும்.
3. அஜீரணம் உள்ளவர்கள் உணவு உண்பதற்கு முன்பாக உணவில் 2 டீஸ்பூன் தேனுடன், சிறிது லவங்கப்பொடியை தூவிச் சாப்பிட அஜீரணம் குணமாகும்.
4.சிலர் என்றும் இளமையுடன் இருக்க விரும்புவர் .அவர்கள் மிதமான சுடுநீரில் 4 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியைக் கலந்து பருகி வர இளமை நிரந்தரமாகும்.
5. கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளோர் தினமும் மூன்று வேளையும் 2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பொடியை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடித்துவர உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் கரைந்துபோகும்.
6.தோலில் சொறி, படைகள் உள்ளோர் தேன், லவங்கப்பொடி இரண்டையும் சமஅளவில் எடுத்துக்கொண்டு ஒன்றாகக் கலந்து, சருமத்தில் ஏற்படும் நோய்களான சொறி, படைகள் மீது பூசி வர குணமாகும்.
7.உடலின் எடை குறைய நினைப்போர் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மிதமான சுடுநீரில் தேனையும், லவங்கப் பொடியையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடலின் எடை குறையும்.
8.கேன்சர் பாதிப்புக்குள்ளோர் 1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை சேர்த்து தினமும் 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் குறையும்.
9.சளி, இருமல் பிரச்சினை உள்ளோர் சுடுநீரில் 1 டீஸ்பூன் தேனை ஊற்றி இளஞ்சூடாக்கி, அதனுடன் சிறிதளவு லவங்கப்பொடியைச் சேர்த்துச் சாப்பிட சைனஸ், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் பறந்துபோகும்.