அதிமதுரத்தை தூள் செய்து தேனில் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக நம் உடலில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு ஏராளமான இயற்கை சிகிச்சை முறைகள் உள்ளன .இந்த இயற்கை சிகிச்சை முறைகள் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்
1.முடக்கற்றான் இலை வெப்ப வீரியம் உள்ளது இது துவர்ப்பும் கசப்பும் சுவையுடையது.
2. முடக்கற்றான் இலை மூலம் கிரந்தி கரப்பான் கீல் பிடிப்பு சினைப்பு குதிங்கால் வாதம் மலக்கட்டு போன்ற நோய்கள் தீரும் கசாயமிட்டு சாப்பிடலாம்.
3.நாயுருவி வேர் பயன்மிக்க மருத்துவப் பொருளாகவும் இதனால் காமாலை தீரும் சளி குறையும். இதன் வேர் கொண்டு பல் துலக்கி வர பல் சம்பந்தமான வியாதி போகும்.
4.பப்பாளி பழங்கள் பல நோய்களை குணமாக்க உள்ள பழங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
5.பப்பாளி பழங்கள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் கண் ஒளியை அதிகரிக்கும்.
6.அடுத்து ஒற்றை தலை வலிக்கு மிளகு, பூண்டு, கடுகு, உளுந்து ஆகிய மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு தலையில் தேய்த்து குளித்து வந்தால் குணமாகும்.
7.சிலருக்கு இடுப்பு வலி, கை கால் குடைச்சல் இருக்கும் .இது போன்ற தொல்லைகளுக்கு சிக்கன வைத்தியமாக கொஞ்சம் கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அதில் சிறிது தேனை கலந்து பிசைந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி கைகால் குடைச்சல் நீங்கும்.
8.சிலருக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும் .இதற்கு கோரைக் கிழங்கை நீரிலிட்டு காய்ச்சி அந்த நீரை குடித்தால் நன்றாக வியர்க்கும் காய்ச்சலும் தணியும்.
9.சிலருக்கு இடைவிடாத இருமல் இருக்கும் .இந்த இருமலுக்கு அதிமதுரத்தை தூள் செய்து அதில் கொஞ்சம் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் போதும்.

