கொட்டாவி விடுவதன் மூலம் என்ன நன்மை தெரியுமா ?

 
kottavi

பொதுவாக நமக்கு வரும் இருமல் ,தும்மல் ,விக்கல் ,கொட்டாவி போன்றவை நம் உடலில் தோன்றும் சில சமிஞை என்று கூறலாம் .தும்மல் மூலம் நுரையீரலில் தூசு சேராமல் பாதுகாக்கப்படுகிறது .அதே போல கொட்டாவியும் நம் மூளை மற்றும் நுரையீரலில் பல மாற்றங்களை உண்டு பண்ணுகிறது .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.கொட்டாவி விடுவதன் மூலம் மூளை மிகவும் குளிர்ச்சியான உணர்வைப் பெறுகின்றது.
2.நாம் விடும் கொட்டாவியின் போது அளவுக்கு அதிகமான காற்று மிகவும் ஆழமாக உள்நோக்கி இழுக்கப்படுகிறது . 
3.இந்த கொட்டாவியால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்காது தவிர்க்கப்படுகிறது  
4.கொட்டாவி மூலம் நுரையீரலில் உள்ள  காற்று அறைகள்  விரிவடைந்து,அங்கு  பரப்பியங்கி நீர்மம் ஒன்றை தோற்றுவிக்கின்றது.
5.கொட்டாவி மூலம் ஒரு விடயத்தில் தமக்கு ஈடுபாடு இல்லை என்பதை தெரிந்தோ அல்லது தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
6.வேறொருவர் கொட்டாவி விடும்  போது அந்த ஒலியைக் கேட்பவரின் செவியில் நடுவில் திடீர் அழுத்த மாற்றம் ஒன்று உருவாகும்.
7.தொடர்ச்சியான வேலை, தொடர்ச்சியான இயல்பான தூக்கமின்மை போன்றவற்றால் சூடான மூளையை குளிர்விப்பதற்காக அடிக்கடி கொட்டாவி வரும் ..
8.அதுமட்டுமல்லாமல் நுரையீரலில் சேமிக்கப்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான கரியமில வாயு நாம் பிறப்பிக்கும் கொட்டாவிகள் மூலமாக வெளியேற்றப்படுகிறது ,நுரையீரல் சுத்த மாகிறது 
9.கொட்டாவி மூலம் புதிதான ஆக்சிஜன் வாயுவை நுரையீரல் இழுத்து சேமிக்கிறது