நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கக்கூடியது இந்த வைட்டமின்

 
kalan kalan

பொதுவாக நம் உடல் இயங்கவும் ,ஆரோக்கியமாய் வாழவும் நிறைய விட்டமின் சத்து நமக்கு தேவை .அதில் மிக முக்கியமானது விட்டமின் பி ,மற்றும் விட்டமின் டி மற்றும் ப்ரோட்டின் சத்துக்கள் .இந்த விட்டமின்கள் எந்த உணவில் உள்ளது என்றும் இதை எப்படி பெறலாம் என்றும் இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.நிறைய பேருக்கு புரோட்டீன் என்று கூறப்படும் புரதம் குறைவாய் உள்ளது .இது , உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்றாகும். . 
2.இந்திய மக்களில் 80 சதவீதத்தினருக்கு இந்த ப்ரோட்டின்  குறைபாடு உள்ளது. 
3. இந்த ப்ரோட்டீன் சத்துக்கள் முட்டை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூசணி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றில்  உள்ளது. 
4.அடுத்து  கருவுற்ற தாய்மாருக்கு அத்தியாவசியமான தேவை ஃபோலேட் என்ற விட்டமின் ஆகும். 
5.ஃபோலேட் என்ற விட்டமின் கீரை மற்றும் காய்கறிகளில் அதிகம் காணப்பட்டாலும் இந்தச் சத்து பெரும்பாலானோருக்குக் குறைவாகவே உள்ளது. 
6.ஃ போலேட் என்ற விட்டமின்ஆரஞ்சு வகை பழங்கள், பிரெக்கொலி இவற்றிலும் வைட்டமின் பி9 கிடைக்கிறது. 
7.அடுத்து மிக முக்கியமானது வைட்டமின் டி உடலிலுள்ள எலும்புகளுக்கு வலு சேர்ப்பதாகும். 
8.இந்த வைட்டமின் டி நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கக்கூடியது. 
9.வைட்டமின் டி இது சூரிய ஒளியில் கிடைக்கிறது. 
10.ஆனாலும் நம் நாட்டில் வைட்டமின் டி சத்து குறைவால் பாதிக்கப்பட்டோர் ஏராளமானோர்  உள்ளனர். 
11.இந்த ஆரோக்கியம் தரும் வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினாகும். இது முட்டை, பால், மீன், காளான் ஆகியவற்றில் நிறைய  கிடைக்கிறது..