அடிக்கடி நோய் உண்டாவதைத் தடுக்க எந்த வைட்டமின் தேவை தெரியுமா ?

 
doctor

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் விட்டமின் சி சத்து அவசியமாகும் .இந்த விட்டமின் சி சத்து குறைவதால் நம் உடலில் உண்டாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.ஒரு ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் சி சத்து மிகவும் இன்றியமையாதது. 
2.இந்த சத்து சூரிய ஒளியால் சருமத்திற்கு உண்டாகும் சேதங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
3.பற்களின் ஈறுகளில் இரத்தம் வழிவதும் வைட்டமின் சி சத்தின் குறைபாட்டிற்கான அறிகுறி என்பது சற்று ஆச்சர்யத்தை உண்டாக்கலாம். 
4 சத்து குறைபாடு தீவிர நிலையை அடையும்போது, ஈறு பாதிப்பு மோசமடைந்து பற்களை இழக்கும் நிலை ஏற்படலாம். 
5.வைட்டமின் சி சத்து குறைபாடு உள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு அசாதாரண அறிகுறி எடை அதிகரிப்பு. . 6.வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பதால்,  வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படியும் நிலை உண்டாகலாம்.
7.நீங்கள் வைட்டமின் சி சத்தை குறைவாக எடுத்துக் கொண்டால், எளிதில் நோய்வாய்ப்பட நேரலாம். . 8.அடிக்கடி நோய் உண்டாவதைத் தடுக்க வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.:
9.வைட்டமின் சி சத்து உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கி , உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. 
10.வைட்டமின் சி சத்து குறைவாக இருந்தால் தொற்று மற்றும் இதர நோய்கள் எளிதில் உங்களை நோக்கி வரும் ..
11.எலுமிச்சை, ஆரஞ்சு, பப்ளிமாசு, கிவி, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, பசலைக் கீரை, ப்ரோகோலி, பப்பாளி போன்றவை வைட்டமின் சி உள்ள  சில உணவு வகைகளாகும்