தினை அரிசியால் கிடைக்கும் நன்மைகள் தெரிஞ்சா ,பாலிஷ் அரிசி சாதம் பக்கமே போக மாட்டிங்க

 
thinai

தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம்.இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

தினைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. அரிசி, கோதுமை, கேவரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருள்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப்படுகிறது.


இதயம் சீராக செயல்பட வைட்டமின் பி 1 அவசியம். இவை தசை மற்றும் நரம்புகளுக்கு இடையில் செய்தியை பரிமாற்ற உதவுவதோடு இதயத்தின் செயல்பாடுகளையும் பாதுகாக்கிறது. இந்த பி வைட்டமின் குறையும் போது இதயத்தின் செயல்பாட்டில் குறைபாடு நேர்கிறது. . 

1.

தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினை அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.

1. அதிக அளவு நார்ச்சத்து

தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.

2.உடல் எடை குறைக்க உதவும்

தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரவும்.

தொப்பையினை குறைக்க

3.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்

தினை அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் உடையது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சுவது தாமதமாக ஏற்படும். தினமும் இதனை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

4. புரத சத்து நிறைந்தது

தினை அரிசியில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்ச்சி சீராக அமையும். மேலும் உங்களின் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

5. பீட்டா கரோட்டின் நிறைந்தது

தினை அரிசியின் பொன்னிறம் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். எனவே தினை அரிசியினை தினமும் உண்டு வாருங்கள் நண்பர்களே.

6. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது

தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்க;லாய் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். எனவே எப்பொழுதும் இளமையுடன் இருக்க தினமும் தினை அரிசி உட்கொள்ளுங்கள்.

7. வலிமையான எலும்புகள்

கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.

இவ்வளவு நன்மைகள் தினை அரிசி போன்ற சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளதால் அரிசி போன்ற தானியங்களை தவிர்த்து சிறுதானியங்களை உண்டு வாருங்கள் உறவுகளே.