இப்படி வயிறை சுத்தம் செய்தால் எப்படி ஆரோக்கியமா வாழலாம் தெரியுமா ?

 
stomach

 மனித உடலின் மொத்த ஆரோக்கியம் நம் வயிற்றுக்குள் தான் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவில் தான் நம் ஆரோக்கியமே இருக்கிறது. நம் வயிறு கெட்டுப் போயிருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம்.
வாய் துர்நாற்றம் வீசும். பசி இருக்காது. வயிற்றில் அதிகமான நச்சுத்தன்மை தங்கி சின்ன, சின்ன பூச்சிகள் உருவாகும். இதனால் நாளடைவில் வயிறு உப்புசம், தொப்பை முதலியவை ஏற்படும். இதை எல்லாத்தையுமே சரி செய்ய சிம்பிளான இயற்கை வைத்திய முறைகள் உள்ளன.

வயிறு உப்பசம், வாய்வு தொல்லை, வயிறு பெருகுவது, உடல் எடை கூடுவது, அதிக மூச்சுத்திணறல் ஏற்படுவது, அதிக தொலைவு நடக்க முடியாமல் இருப்பது.

முகத்தில் அதிக அளவிலான சதைகள் உருவாகுவது, பற்களில் தேவையற்ற அழுக்குகள் உருவாகுவது, போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு வயிறு மிக முக்கியமானதாக உள்ளது.

வயிறு எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தாள் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம், அது மட்டுமில்லாமல் உடல் நிறத்திலும் பல்வேறு மாற்றங்களை உங்களால் காண முடியும்.

வயிற்றை சுத்தம் செய்வது மிகமிக முக்கியம் ஏனென்றால் வயிறு சுத்தமாக இருந்தால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சுத்தமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் தேவையற்ற அழுக்குகள் சேர்வது குறைக்கப்படும்.

வயிற்றை சுத்தம் செய்ய வீட்டிலுள்ள இந்த 3 பொருட்கள் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் இதனுடைய பலன்கள் ஏராளம்.

வயிற்றை சுத்தம் செய்ய எளிய இயற்கை வழிகள்

வயிறு மந்தம், பசியின்மை மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு.

வயிற்றை எப்படி சுத்தம் செய்வது

 அதாவது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும், பிறகு நன்கு கொதித்த தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள்.

அதனுடன் 3 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் வெதுவெதுப்பான வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் உள்ளே சென்று சிறிது நேரத்தில் மலம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

இல்லை எனில் 10 நிமிடம் கழித்து மேலும் சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும், 5 நிமிடங்களில் கழிவறை செல்ல நிச்சயம் சென்று வந்தவுடன் மீண்டும், எலுமிச்சை உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடியுங்கள்.

சில நிமிடங்களில் மறுபடியும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும், இதுபோல் நான்கைந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு தொடர்ந்து அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம்.

What Are The Home Remedies For Keeping The Stomach Clean

நீர் அருந்துவதை நிறுத்தினால் மலம் வருவது நின்றுவிடும், இந்த முறையில் வயிறு இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும், உடல் வலுபெறும்.

சாப்பிடும் உணவுகள் உடலில் நன்கு தங்கும், நன்கு செரிமானமாகும், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கப்படும்