குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பழம் இது

 
seetha palam seetha palam

பொதுவாக சீத்தா பழம் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இந்த பழத்தினை நாம் தொடர்ந்து உண்பதன் மூலம் நாம் என்ன நன்மைகளை அடையலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
2.குழந்தைகளுக்கு எலும்பு உறுதி அவசியம் .குழந்தைக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும். 
3.சிலர் பலவீனமாய் இருப்பர் .சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
4.சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். 
5.சீத்தாப்பழத்தை உட்கொண்டால் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
6.சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
7.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்த பின்னர்  அரைத்து கொள்ளவும்  
8.இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
9.சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
10.சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவகுணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது.