சளி, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது இந்த விதை

 
sapja sapja

பொதுவாக இன்றைய தலைமுறையினர் உடல் எடையை குறைக்க மிக கஷ்டப்படுகின்றனர் .இதற்காக ஜிம் ,டயட் என்று மெனக்கெடுகின்றனர் .அப்படியிருந்தும் உடல் எடை குறைக்க முடியவில்லை .ஆனால் சப்ஜா விதை என்று ஒன்று உள்ளது இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை மட்டுமல்ல பல்வேறு நன்மைகள் உண்டு அது அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலர் அதிக உடல் எடையுடன் இருப்பர் .அவர்கள் சப்ஜா விதைஉண்டால்  உடல் எடை குறையும் 
2.இந்த சப்ஜா விதைகளில் புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. 
3. இந்த புரதம் மற்றும்  நார்ச்சத்து தேவையற்ற பசியைக் குறைக்க உதவுகின்றன. . இதனால் அடிக்கடி சாப்பிட தோன்றும் பிரச்சனை இருக்காது.
4.சப்ஜா விதைகள் சிறந்த நீரிழிவு எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. 
5..அதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பாட்டிற்கு முன்பு சப்ஜா விதைகளை  சாப்பிட்டு வரலாம் .இதனால்  இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கலாம்.
6..இந்த  விதைகள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான கனிமங்களின் வளமான ஆதாரமாகும். 
7.இந்த சப்ஜா விதை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. 
8.இந்த சப்ஜா விதை சளி, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
9.சப்ஜா விதைகள்  சாப்பிடுவதனால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
10.சப்ஜா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து  தினசரி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. 
11.இதனால், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜாவை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய நிவாரணம் பெற முடியும்.