நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும் இந்த உணவு
பொதுவாக கிட்னியில் பணி என்னெவென்றால் நம் உடலில் சேரும் அசுத்தங்களை க்ளீன் செய்வதுதான் ,ஆனால் அந்த கிட்னியிலேயே அசுத்தம் சேர்ந்து விட்டால் அதை எப்படி க்ளீன் செய்வது .அதற்கு தான் இந்த பதிவு ,கிட்னியில் சேரும் கல் மற்றும் அசுத்தங்களை எப்படி க்ளீன் செய்வது என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.ஆரோக்கியம் தரும் மாதுளையில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது.
2.இந்த மாதுளையின் பொட்டாசியம் சிறுநீரக கற்கள் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது மற்றும் கிட்னியில் இருந்து அசுத்தங்களை நீக்குகிறது.
3.அடுத்து எலுமிச்சை சாறு அமிலத்தன்மை கொண்டது மற்றும் அதில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
4.மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் தன்மை நம் உடலில் சிறுநீரக கல் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.
5.ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ,
6.ஆப்பிள் சைடர் வினிகர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும் உதவுகிறது.
7.சிறுநீரக கற்களைக் கரைக்கும் சிட்ரிக் அமிலங்களும் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளன.
8. ராஜ்மா என்னும் பீன்ஸ் அசுத்தங்களை வெளியேற்றவும், உடலை நச்சு நீக்கவும் உதவுகிறது.
இந்த ராஜ்மா உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உயராமல் காக்கும் .
9.மேலும்,ஆரோக்கியம் உள்ள ராஜ்மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
10.ராஜ்மா போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உண்பது டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுவதை மருத்துவ ஆய்வு கூறுகிறது.


