பப்பாளி பழம் பெண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

 
papaya papaya

பொதுவாக சில பெண்கள் வீட்டில் பூஜையிருந்தாலோ அல்லது விசேஷம் ஏதும் இருந்தாலோ அந்த நாட்களில் மாத விடாய் வந்து விட கூடாது என்று முன்கூட்டியே மாத விடாய் வர ஆங்கில மருந்துகளை எடுத்து கொல்வர் .ஆனால் இதில் பக்க விளைவு அதிகம் என்பதால் ,இயற்கையான சில உணவுகள் மூலம் எப்படி சீக்கிரம் மாத விடாய் வரவைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
1.பப்பாளி பழம் உடலில் அதிக வெப்பம் உருவாக்கி விடும் .இதனால் மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். 
2.அதுமட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது .இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.
3. அடுத்து ஓம விதைகளை தண்ணீரில் ஊறவைத்து விடவும் .இந்த விதைகளை மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிக்கலாம் .இது  உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.
4.அடுத்து எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம் ., இந்த எள்ளை மாதவிடாய் தேதிக்கு 15 நாடகளுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
5.அடுத்து அன்னாசி  கூட சாப்பிடலாம் .இந்த பழம் உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
6.மேலும் சீரகம்,இஞ்சி,கொத்தமல்லி விதைகள்,பெருஞ்சீரகம் விதைகள்,மாதுளை,வைட்டமின் சி உணவுகள்
போன்றவற்றையும் பெண்கள் ஆரோக்கியத்துக்கு உணவில் சேர்த்து கொள்ளல் நலம் சேர்க்கும் 
7.மேற்கூறியதை தவிர மேலும் சில உணவுகளானது கேரட், வெல்லம், மஞ்சள், பேரிட்சை,பூசணிக்காய், பாதாம், திராட்சை, முட்டை ஆகியவற்றையும் பெண்கள்  தங்களின் ஆரோக்கியத்துக்கு உணவில் எடுத்துக்கொள்ளலாம்