பப்பாளி இலை மூலம் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக ஒரு வகை கொசுக்களால் டெங்கு ஜுரம் பரவுகிறது .இந்த டெங்கு ஜுரம் வந்து விட்டால் நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும் .இந்த டெங்கு ஜுரத்திற்கு இயற்கை முறையில் பப்பாளி இலை மூலம் சில சிகிச்சை செய்யலாம் .அதை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1. டெங்கு பாதித்தோருக்கு இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்தால் மாதவிடாய் இரத்த போக்கும் அதிகரிப்பதோடு உடல் சோர்வுற ஆரம்பிக்கும்.
2.டெங்கு பாதித்தோருக்கு மலம், சிறுநீர் போன்றவற்றில் இரத்தம் கசிவு அறிகுறி தென்படும்.
3.மேலும் டெங்கு பாதித்தோருக்கு உடல் பாகங்களில் ஆங்காங்கே படை திட்டுகள் உண்டாகுவதோடு உடலில் காயம் ஏற்பட்டால் நீண்ட நேரமாக இரத்த கசிவு இருக்கும்.
4. இந்த அறிகுறிகளுக்கு இயற்கையான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலை சாறு பெரிதும் உதவுகிறது..
5.தயார் செய்யும் வழிமுறை
முதலில் ஒரு சில பப்பாளி இலைகளிலுள்ள நரம்புகளை அகற்றி, பப்பாளி இலைகளை சிறிய துண்டுகளாக போட வேண்டும்.
6.பின்னர் 200 மில்லி தண்ணீரில் இந்த இலைகளை போட்டு, அரைதேக் கரண்டி அளவில் சீரகம், மிளகு சேர்க்க வேண்டும்.
7.இதனையடுத்து அடுப்பை மெதுவாக வைத்து தயார் செய்ய வேண்டும்.
8.இந்த 200 மில்லி தண்ணீரானது 100 மில்லியாக குறையும் போது இலைகளை வடிகட்டி ஆற வைத்து குடித்து விட வேண்டும்.
9.இது இரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
10.இந்த பப்பாளி இலைகளின் கஷாயத்தில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி இருப்பதால் தோலில் உள்ள தடிமன்கள் (rashes), தசை வலி, மூட்டு வலி, உள்ளிட்டவை குணமாகும்.
11.பப்பாளி இலைகளின் கஷாயம் கூந்தலின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானதாகும், தோலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், புற்றுநோய் உருவாகும் செல்களை அழித்து அந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது


