பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உண்டாகும் ஆரோக்கியம்

 
tips of rice water tips of rice water

பொதுவாக அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பழைய சோறும் நீராகாரமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தனர் .அதனால் பல நோய்கள் இன்றி ஆரோக்கியமாய் வாழ்ந்து வந்தனர் .இந்த பழைய சோறை இப்போது நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.இரவில் நீர் ஊறிய சோற்றை அந்த நீரோடு அருந்தினால் ஆண்களுக்கு ஆண்மை பெருகும், அவர்களின் தேகத்தில் ஒளி உண்டாகும், 
2.பழைய சோறு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
3.பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், பிரம்மை நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகும் 
4.சிலருக்கு செரிமான பிரச்னைகள் இருக்கும் .இப்படி இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக பழைய சோற்றினை எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் செரிமான சக்தி கூடுவதற்கு இது உதவும். 
5.அந்த பழைய சோறு 12 மணி நேரம் ஊறியதாக இருக்க வேண்டும்.
6.இப்படி ஊறிய பிறகுதான்  முறையான நொதித்தல் ஏற்பட்டு உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாகத் தோன்றும்.
7.மேலும் பழைய சோற்றுக்கு சின்ன வெங்காயம்தான் சரியான ஜோடி. 
8.பழைய சோறுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது பித்த, வாத நோய்கள் நீங்கும். 
9. காலையில் பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும் .எனவே  வேலைக்குச் செல்பவர்கள் தயிர்/மோர் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.
10.இயற்கையான தட்பவெட்ப நிலையில்தான் பழையசோறு ஊட்டச்சத்துமிக்க உணவாக மாறும். 
11.பழைய சோற்றினை ஊற வைக்கும்போது மண் பானையில் ஊற வைப்பது இன்னும் நல்லது.