முருங்கை இலை சூப் குடித்தால் எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?

 
murungai murungai

பொதுவாக முருங்கை கீரை நம் உடலுக்கு நிறைய இரும்பு சத்தை அள்ளி கொடுக்கும் ஆற்றல் கொண்டது .
அதனால் வெறும் வயிற்றில் தினமும் முருங்கை இலை சூப் தயாரித்து  குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும் .மேலும் , பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும். சரி... எப்படி முருங்கை இலை சூப் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம் -

1.முதலில் முருங்கை இலை 1 கப் எடுத்து சுத்தம் செய்து ,அதனுடன் அரிசி தண்ணீர் - 2 கப் எடுத்து கொள்வோம் 
2.அடுத்து பச்சை மிளகாய் ஒன்றை எடுத்து கொண்டு அதனுடன் தேங்காய் பால் - 2 கப் எடுத்து கொள்வோம் 
3.அடுத்து சீரகம் - 1 ஸ்பூன் எடுத்து கொண்டு ,அதனுடன் மிளகு - அரை ஸ்பூன்,நான்கு சாம்பார் வெங்காய்ம் ,
மற்றும் ஒரு தக்காளி எடுத்து கொள்வோம் .இப்போது சூப் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் 
4.இந்த முருங்கை சூப் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
5.அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்த முருங்கை இலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
6.பிறகு, தேங்காய் பால், மிளகு, சீரகம் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
7.ஒரு பாத்திரத்தில் லேசான எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க ,
சுவையான முருங்கை இலை சூப் ரெடி.
8.இந்த முருங்கை இலை சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும் 
9.முருங்கை இலை சூப் குடித்தால் சளி, குறையும் 
10..முருங்கை இலை சூப் குடித்தால் தொண்டை வலி குறையும்.