மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உண்டுவர எந்த நோய் ஓடிடும் தெரியுமா ?

 
ulcer health tips ulcer health tips

பொதுவாக நம் முன்னோர்கள் பல்வேறு இயற்கை வைத்தியத்தைநமக்காக கொடுத்து விட்டு சென்றுள்ளனர் .இந்த இயற்கை வைத்தியத்தை முறையாக பயன் படுத்தினால் நாம் எந்த டாக்டரிடமும் எந்த நோய் சிகிச்சைக்காக்கவும் செல்ல வேண்டாம் .அந்த இயற்கை வைத்தியம் சில வற்றை இந்த பதிவில் பார்க்கலாம் 
1.மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
2.ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து சாப்பிட தோலில் ஊறல் குணமாகும் 
3.ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
4.எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்.
5.மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த சிறுநீர் குணமாகும்.
6.நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தொண்டை புண் தீரும்.
7.தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட  கைநடுக்கம் தீரும்.
8.பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
9.கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிட, தாய்ப்பால் சுரக்கும்.
10.உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.