சாப்பிட்ட சாப்பாடு நன்றாக செரிமானம் ஆவதற்கு இந்த டீ உதவுகிறது

 
kudal kudal

பொதுவாக பால் டீயை விட க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்றவைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. இவற்றில் லெமன் டீயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த லெமன் டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பொதுவாக லெமன் டீ நம் உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, 
2.பிளாக் டீயில் சிறிது லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.
3.முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து,கொள்ளவும்  
4.சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயார்.
5.தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். 
6.நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக செரிமானம் ஆவதற்கு லெமன் டீ உதவுகிறது, 
7.சில நேரங்களில் நமக்கு தலைவலிக்கும் அந்த சமயத்தில் லெமன் டீ குடித்தால் சரியாகிவிடும். 
8.லெமன் டீ குடித்தால், மன அழுத்தத்தை போக்கி நம்மை உற்சாகத்துடன் செயல்பட துணைபுரிகின்றது.
9.இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது, 
10.லெமன் டீ குடித்தால் மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது.