காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது எந்த நோயை தடுக்கும் தெரியுமா ?

 
health tips of koyya health tips of koyya

பொதுவாக கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .
உதாரணமாக  பற்கள் உடைந்து விடுவது, உடலின் எலும்புகள் வலுவிழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு இயற்கையிலேயே அதிகளவு வைட்டமின் சி சத்துகள் அதிகம் நிறைந்த கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவது சிறந்ததாகும்.மேலும் இந்த கொய்யா மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த ப்பதிவில் நாம் காணலாம் 
 
1.ஆரோக்கியம் தரும் கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. 
2.இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
3.ஆரோக்கியம் தரும்  கொய்யா பழம் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு பழமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக  இருக்கிறது.
4.தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். 
5.சிலருக்கு அல்சர்,என்ற  குடல்களில் புண் ஏற்படும்.இந்த  புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.
6.மேலும் கொய்யா பழத்தில் “லைக்கோபீனே, க்வெர்செடின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. 
7.இந்த ஆரோக்கியம் தரும் கொய்யா  உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளருவதை தடுப்பதில் பேருதவி புரிகிறது. 
8.ஆரோக்கியம் தரும்  கொய்யா பழத்தில் “வைட்டமின் பி 9” என்கிற சத்தும், “போலிக் அமிலம்” அதிகம் உள்ளது. 
9.இந்த சத்துகள் வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் பணியை செய்ய அவசியமானது என்பதால் கொய்யா நமக்கு ஆரோக்கியம் தரும்